Tuesday, November 29, 2011
Monday, November 21, 2011
108 சங்கு நீராட்டல் முதல் வாரம்
கார்த்திகை திங்கட்கிழமை (சோமவாரம்) சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.கார்த்திகை திங்கள் விரதமிருப்பவர்களுக்கு மிகுந்த நற்பலன்களை அள்ளித்தருவார்,
அதுபோல் நீராட்டு பிரியனான எம்பெருமானை 108சங்குகளால் நீராட்டுதல் மிகுந்த நற்பலன்களை தரும்.
வலம்புரி சங்கு கரக்கோயிலானை நீராட்ட காத்திருக்கிறது.
நீர் என்பது உலக உயிர்களுக்கு அமுதத்துக்கு ஒப்பானது, ஆதலால் 108 சங்கினால் நீராட்டல் என்பது உயர்வான பொருளை கொண்டு உயர்வானவரை கொண்டாடுதல் ஆகும்.
கடம்பூர் அமிர்தகடேசுவரர் அமுததால் ஆனவர், அவரை கார்த்திகை திங்கள்கிழமையன்று நூற்றெட்டு சங்குகளை வைத்து யாக பூசை செய்து அதனை கொண்டு நீராட்டப்பெற்றால் எல்லா நலன்களும் பெறுவர்.
தொடர்ந்து அனைத்து திங்கள்களிலும் 108 சங்கு நீராட்டல் நடைபெறும். மேலும் படங்களுக்கு செல்லவும் 108 சங்கு அபிஷேகம்

Saturday, November 19, 2011
நந்திஎம்பெருமானுக்கு வெள்ளி அங்கி
சிவகணங்களுள் முதன்மையானவர் நந்தியெம்பெருமான், அமிர்தகடேசுவரர் திருமேனிக்கு வெள்ளிஅங்கி பூட்டிய பின்னர் நந்திஎம்பெருமானுக்கும் வெள்ளி சார்த்தி பார்க்க ஆவல் எழுந்தது. அதனை ஒருபக்தர் நனவாக்குகிறார்.
நந்திக்கும் அங்கி தயாராகுகிறது.
அமிர்தகடேசுவரர் திருஅங்கி பணியினை செய்த பெருமைக்குரிய ,தாராசுரம் திரு.மகாலிங்க பத்தர் அவர்களே இப்பணியையும் மேற்கொள்கிறார்.
நந்திக்கும் அங்கி தயாராகுகிறது.
அமிர்தகடேசுவரர் திருஅங்கி பணியினை செய்த பெருமைக்குரிய ,தாராசுரம் திரு.மகாலிங்க பத்தர் அவர்களே இப்பணியையும் மேற்கொள்கிறார்.
Friday, November 11, 2011
அன்ன வார்ப்பு விழா
அன்னம்பாலித்தல் என்பது இந்திய கலாச்சாரத்தில் சிறப்பாக போற்றப்பட்டு வருவது, எனவே திருக்கோயில்களில் இறைவனுக்கு அன்னத்தினால் போர்த்த படுவது வழக்கம்
இந்த வருடம் ஐப்பசி மாத முழு நிலவு நாளில் அமிர்தத்தினால் உருவான கடம்பூர் அமிர்தகடேசுவரருக்கு சிறப்பாக அன்னத்தினால் வார்ப்பு செய்யப்பட்டது
பின்னர் சாற்த்தப்பட்ட அமுது கலைக்கப்பட்டு, சிறிதளவு அன்னம் உலக உயிர்கள் பசியாற ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் சிவதீர்த்தத்தில் கரைக்கப்பட்டு,மீதமுள்ளவை தயிர் சாதம்,புளிசாதமாக நிவேதனமாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.
திரு. தமிழ் அவர்களும் இணைந்து அன்ன வார்ப்பு உபயம் செய்தார் அன்னாபிஷேக காட்சிகள்
Saturday, November 5, 2011
Wednesday, November 2, 2011
முருகன் திருக்கல்யாணம்
ஐப்பசி சஷ்டிதிதி அன்று சூரன் வதம் முடிந்த அடுத்தநாள் முருகனுக்கும் வள்ளி,தெய்வானைக்கும் திருமண நிகழ்வு நடைபெறும்.
ஊஞ்சலில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அமர்திருக்கும் காட்சி
சீர்வரிசைகள் விநாயகர் சன்னதியில் இருந்து வலமாக கொண்டுவரப்பட்டு முருகன் தெய்வானையுடன் மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது
ஊஞ்சலில் வைத்து "வள்ளி கல்யாண வைபோகமே"எனும் பாடல் பாடபெற்று திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது.
பின்னர் தேவார ,நாதஇன்னிசை முழங்க திருக்கல்யாணம் நிறைவுற்றது.
இதனை ஏற்று நடத்திய திரு.சொக்கலிங்கம் பிள்ளை குடும்பத்தினர்க்கு மரியாதை செய்யப்பட்டது.
காட்சிகள் அனைத்தையும் காண முருகன் திருக்கல்யாணம்
Subscribe to:
Posts (Atom)