******************** கடம்பூர் கோயில்: July 2012

Wednesday, July 25, 2012

சுந்தரர் குருபூசை




திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தாராம். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 இவர் திருக்கடம்பூர் என தேவாரத்தில் குறிப்பிடப்படும் கடம்பூரினை வைப்புத்தலமாக பாடியுள்ளார் .ஊர்த்தொகையில் "காட்டூர்கடலே கடம்பூர் மலையே " என தொடங்கும் பாடலும் , கரக்கோயில் முன் கண்டதும் என்ற தேவார வரிகள் சுந்தரர் இத்தல இறைவனை நினைந்து பாடியது ஆகும்.

 இன்று 26.07.2012 இவரது குருபூசையானது சிறப்புற நடந்தேறியது.

Saturday, July 21, 2012

சோதி மின்னம்மைக்கு லட்சார்ச்சனை -விளக்குபூசை

கடம்பூர் அமிர்தகடேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் ஆடி மாதம் 30 (14.08.2012) தேதி அன்று காலை சோதி மின்னம்மைக்கு லட்சார்ச்சனை நடைபெறும் தொடர்ந்து மாலை விளக்கு பூசையும் நடைபெறும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget