ஐப்பசி முழுநிலவு நாளில் எம்பெருமானுக்கு அன்னவார்ப்பு செய்தல் சிறப்பு, வடித்தெடுத்த அரிசி சாதத்தினை எம்பெருமான் திருமேனி மீது சார்த்தி காய்கறிகளால் , மலர்களால் அழகு செய்து தீப வழிபாடு செய்தல் வழமை

கடம்பூர் ஈசன் அன்னவார்ப்பில் உள்ளதை காண்கிறீர்கள், இந்திரனின் பாபத்தினை போக்கிய பாபஹரேஸ்வரர் மீதும் அன்ன உருண்டை வைத்து வழிபாடு நடைபெற்றது.
கோயிலில் இருந்து முழுநிலவு காட்சி
சார்த்தப்பட்ட அன்னம் உலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் சென்று சேரவேண்டி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம் , அவ்வாறே திருக்கோயில் சிவாலய குளத்தில்கரைக்கப்பட்டது.
