திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் முசிறியம் சிவன்கோயில்
கொரடாச்சேரியில் இருந்து பாண்டவை ஆற்றின் கரையில் கண்கொடுத்த வனிதம் செல்லும் வழியில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது முசிறியம் கிராமம்.
இங்கு தொடக்கப்பள்ளி அருகில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன் கோயிலும் அருகே பெருமாள் கோயிலும்.
பழம்கோயில் சிதைந்த பின்னர் எழுப்பப்பட்டுள்ள சிறிய கோயில் இதுவாகும். கிழக்கு நோக்கிய பெரிய லிங்கம் பெயர் அறிய இயலவில்லை, அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார் இறைவன் கருவறை வாயிலில் சிறிய விநாயகர், மற்றும் முருகன் உள்ளனர். சற்று எதிரில் பைரவரும் சூரியனும் உள்ளனர். நவகிரகங்கள் உள்ளன. ஓர் ஆஞ்சநேயரும் சிவாலயத்தில் உள்ளது.
இறைவன் இறைவி இரு கருவறையையும் இணைக்கிறது ஓர் கான்கிரீட் மண்டபம் இம்மண்டபத்திலேயே ஓர் கிணறும் உள்ளது. கோயிலுக்கு தென்புறம் ஒரு சிறிய குளமும் உள்ளது.
ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட கோயில் என தோன்றவில்லை, எனினும் இறைவன் இதையெல்லாம் தாண்டி அன்பாக தம்மை வணங்கவரும் பக்தர்களை காண அனைத்து நெறிமுறைகளையும் தாண்டி வரவேற்க காத்திருக்கிறார்.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம் .

#வாருங்கள்கிராமசிவாலயம்செல