******************** கடம்பூர் கோயில்

Tuesday, July 19, 2011

செப்பு கவசம் உருவாதல்




 செப்பு கவசம் கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்
திருமேனிக்கு செய்யப்படுகிறது செப்பு தகடுகள்
திருமேனியின் அளவுக்கு வெட்டப்பட்டு
வளைக்கப்பட்டு சூடுபடுத்தி பற்றவைக்கபடுகிறது



இதன் பின்னர் மெல்லிய பட்டைகள் பொருத்தி பூவேலைப்பாடுகள்
செய்யப்படும் அதன் பின்னர் வெள்ளி பூச்சு பூசப்படும்







கும்பகோணம் தாராசுரம் பகுதியை
சேர்ந்த மகாலிங்க பத்தர் மற்றும்


 அவரது உதவியாளர்கள் பணி செய்வதை காணலாம்
 மூன்று மாத உழைப்பின் பின்னர் செப்பு கவசம் உருவாகியது. பின்னர் இதற்கு வெள்ளி முலாமிடப்பட்டு எம்பெருமானுக்கு சார்த்தப்படும்.



 


Friday, July 1, 2011

அமிர்தகடேச்வரருக்கு வெள்ளி கவசம்

ஸ்ரீஅமிர்தகடேச்வரருக்கு 3 கிலோவில் வெள்ளி கவசம் தயார் செய்யப்படுகிறது முதலில் அளவு எடுத்து வெள்ளி தகட்டில் கவசம் தோராயமான அளவுகளுடன் கொண்டுவரப்பட்டு பொருத்தி பார்க்கப்பட்டது

 ஸ்ரீஅமிர்தகடேச்வரருக்கு 3 கிலோவில் வெள்ளி கவசம் தயார் செய்யப்பட்டு .பின்னர் நகாசு வேலைகள் செய்யப்பட்டு திரு. மணிரத்தினம் உபயதாரர் அவர்களின் மகன் அதனை கோயிலில் இறைவனுக்கு அர்ப்பணித்தார்.வெள்ளி கவசம்

Monday, June 27, 2011

கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

 காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த சிவனருள் உழவாரதிருப்பணி அன்பர்கள் 19.06.2011 அன்று கடம்பூர் கோயிலை சுத்தப்படுத்தினர்


  . தொண்டு செய்து இறைவனை வழிபடுதல் என்பது அப்பரடிகள் பின்பற்றி பேறு பெற்ற வழி. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என அப்பர் இத்தலத்தில் பாடி அருளினார்
 சமயம் கிடைக்கும்போதெல்லாம் தொண்டாற்றி வழிபாடு செய்வீர்.



Saturday, June 18, 2011

மதுரை ஆதினம் கடம்பூருக்கு வருகை

மதுரை ஆதினம் கடம்பூருக்கு வருகை புரிந்தார் 17.6.2011 வெள்ளி அன்று நடை பெற்ற அறுபதின் நிறைவு திருமணத்திற்கு முன்னிலை வகித்தார்.

மேள தாளத்துடன் பூரண கும்ப வரவேற்பு அளித்தல்
 தல விநாயகரை வழிபடுகிறார்
 இறைவனிடம் சங்கல்பம் செய்து கொள்கிறார்
 பிரசாதம் அளிக்கப்படுகிறது.பின்னர் ரிஷபதாண்டவ மூர்த்தியினை பார்த்து பரவசமடைகிறார்.

முன்னதாக வீணைகச்சேரி நடைபெற்றது.

                                                                     
  

Wednesday, June 1, 2011

காளை வாகனத்துக்கு கவசம்

மெழுகு காய்ச்சுதல்


 கடம்பூர் கோயிலில் நந்தி சிலைக்கு கவசம் செய்ய வேண்டி அளவு எடுக்கப்பட்டது
 முதலில் மெழுகு அரக்கு குங்கிலியம் கலந்த கலவை கொதிக்க வைத்து  நந்தி மேல் பூசப்பட்டு தேவையான அளவுகளில் வெட்டபடுகிறது



Tuesday, May 24, 2011

அப்பர் குருபூஜை

சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் அப்பர் பெருமான் இறைவன் அடி சேர்ந்த நாள் அப்பர் குருபூஜை என கொண்டாடப்படுகிறது

Monday, May 9, 2011

கடம்பூரில் குருபெயர்ச்சி










கடம்புரில் 2011  மே மாதம் 8 ந தேதிநள்ளிரவு குரு மேஷ ராசிக்கு இடம். பெயர்கிறார் .இதனை ஒட்டி சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget