******************** கடம்பூர் கோயில்

Wednesday, June 6, 2012

திருஞானசம்பந்தர் முக்தி நாள்



 சீர்காழி எனும் தலத்தில் சிவபாதஇருதையர் ,பகவதியார் எனும் தம்பதியினர் மகனாகஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  பிறந்தவர் , சிவனருளால் ஞானப்பால் உண்டு இறை பதிகம் பாட தொடங்கி அக்குழந்தை பாடிய பாடல்கள் எவ்வளவு தெரியுமா? சுமார் 42000 பாடல்கள்.கிடைக்கபெற்றவை நான்காயிரம் மட்டுமே



 இவரின் பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை திருக்கடைக்காப்பு என அழைக்கபடுகிறது.
இவரின் பதினாறாம் வயதில் மணம் முடிக்கும் தருணத்தில் இறைவன் சோதியில் தோன்றி உற்றார் உறவினரோடு சோதியில் ஐக்கியமாகி தம்மை வந்தடையுமாறு   கூற அவ்வண்ணமே இறைநிலை அடைந்த நாள் இன்று






 இவரின் முக்தி நாள், இவர் பாடி பரவிய தலமான திருக்கடம்பூர் எனும் மேலக்கடம்புரில் சிறப்பாக கொண்டாடபட்டது, சுட்டுவிரல் நீட்டி தாளமிட்டு ஆடும் திருமேனிகளுக்கு சிறப்பு நீராட்டல் நடைபெற்றது.முதன்மை குருக்களின் மைந்தர் திரு.பாலகணேசகுருக்கள் நடத்தி வைத்தமை இங்கே காட்சிகளாக....






Saturday, May 19, 2012

குரு பெயர்ச்சி





 குரு பெயர்ச்சி என்பது ஜுபிடர் என்ற குரு கோள் சூரியனை சுற்றிவரும் தன் பாதையில்  ஒரு சுழற்சியை முடிக்கும்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதாக ஐந்தொகுதி (பஞ்சாங்கம்) கூறுகிறது, இதன் படி குருகோள் ஆடு ராசியில் (மேஷ)இருந்து காளைராசிக்கு (ரிஷப) மாறுகிறது.அதனால் இந்த ராசி அன்பர்கள் ஓராண்டுக்கு குருதரும்  நன்மைதீமைகளை அனுபவிப்பார்கள் .




 இந்த நன் நாளினை முன்னிட்டு கடம்பூர் கரக்கோயிலின் தென் பால் உள்ள(தக்ஷணமூர்த்தி) தென்முக கடவுளுக்கு சிறப்பு பூசனைகளும் வாசனா திரவியங்களை கொண்டு நீராட்டலும் நடைபெற்று வண்ண மலர் ஒப்பனை செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.



ஐந்து முக தீப ஒளியிலே மனம் துய்ப்போம்




மேலும் ஒன்பான் கோள்களில் ஒன்றான குருவிற்கும் சிறப்பு பூசனை நடைபெற்றது

Wednesday, May 16, 2012

சித்திரை முழுநிலவு நாளில் சித்திர குத்தன்பூசை




சித்திரை முழுநிலவு நாளான சனிக்கிழமை 05.0502012அன்று நான்முகனின் கீழ்இயங்கும் காலன்(யமன்), சித்திர குத்தனுக்கும் சிறப்பு பூசனைகள் நடைபெறும்.

காலன் தன் பணிசுமை அதிகமானதால் சிவனைவேண்டி தமக்கு உதவியாக ஒருவரை அளிக்கவேண்டுகிறான்,சிவனும் கண்ணாடியில் தமது உருவத்தினை கண்டு அதிலிருந்து சுந்தரரை வரவழைத்தது போல் தனது சித்திரத்தினை வரைந்து அதிலிருந்து சித்திர குத்தனை வரவழைத்தார், குத்தன் என்றால் வழி வந்தவன் என்று பொருள், சித்திர குத்தன் என்றால் சித்திரத்தில் இருந்து வந்தவன் என்று பொருள்.


கடம்பூர்  கோயிலில் சித்திரை முழு நிலவன்று இக் குத்தனுக்கு சிறப்பு நீராட்டலும் பூசையும் நடைபெற்றது, வட புறத்தில் நான்முகனின் கீழ் காலனும் ,சித்திரகுத்தனும் உள்ளனர். சித்திரகுத்தன் வலது கரத்தில் ஏடும்,இடது கரத்தினை இயல்பாக தொடைமீது வைத்து குத்துகாலிட்டு அமர்ந்த கோலத்தில்  அருள்பாலிக்கும் காட்சி வேறெங்கும் காண இயலாதஒன்று.






சித்திரை முழுநிலவு வானில் தோன்றுகிறது



காலன் கையில் ஏட்டுடன் அருள் பாலித்தல்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget