******************** கடம்பூர் கோயில்

Tuesday, July 16, 2013

திருக்கடம்பூரில் மாணிக்கவாசகர் முக்தி நாள் விழா

 இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் ஒன்பதாம்  நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார்.








 சில காலம் பாண்டியன் அரசவையில் பணியாற்றியதன் பின்  தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.
ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.

























Sunday, June 23, 2013

கடம்பூரில் குறைவிலா நாள் பூசை -ஜூன் 21

 நஞ்சுண்ட சிவன் தனது மயக்கம் தீர தாண்டவம் ஆடுகிறான், அவன் காலடியில் தேவாதி தேவர்கள் எல்லாம் கூடி நின்று பயபக்தியுடன் வணங்கி நிற்கின்றனர். அந்த நாள் யாதொரு குறையிலா நாள் (பிரதோஷநாள்)


 இந்நாள் கடம்பூரில் பிற தலங்களைவிட ஒரு படி மேல் ....யாதெனில் அமுதமே உருவமாய் நின்று அருள் பாலிக்கும் அமிர்தகடேசுவரர் . மேலும் பெருமை சேர்ப்பது ஆயிரம் ஆண்டுகட்குமுன் ராஜேந்திர சோழனின் வெற்றி சின்னமாய் எடுத்துவரப்பட்ட 
தச புஜரிஷப தாண்டவமூர்த்தி எனப்படும் ஏறுகொண்ட பைந்தோள்ஆடல்வல்லான் ஐம்பொற்சிலைஆகும் 


 வழமைபோல் வாசனாதி திரவியங்கள் கொண்டு திருநீராட்டல் பெற்ற சிவ வடிவம் இடபத்தின் மீதேறி பிரகார உலா வரும் காட்சியினை கண்டு களியுங்கள்










கடம்பூரில் கால் வைத்தாலே முக்தி............ தேவரும், முனிவரும்,சோழ மன்னரும், நாயன்மாரும் ,எண்ணற்ற அடியார்களும் வணங்கி மகிழ்ந்த அமுதசிலை யானை நாமும்  வணங்கி முக்தி பெறுவோம் .
இதுநாளில் அன்னம்பாலிப்பு செய்ய அறங்காவலர் 9842676797,
அல்லது அர்ச்சகர் 04144-264638 என்ற இலக்கத்தில் அழையுங்கள்

Monday, June 17, 2013

கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

 என் கடன் பணிசெய்து கிடப்பதே - என அப்பர் பெருமான் பணிசெய்து பாடிபரவிய தலம் திருக்கடம்பூர் காட்டுமன்னார் கோயிலின் தென்மேற்கில் ஆறு கி.மி தூரத்தில் உள்ளது
இத்தலத்தில் வருடம்தோறும் காட்டுமன்னார்கோயில் சிவனருள் திருக்கூட்டத்தினர் ஓர் மாதத்தில் மூன்றாம் ஞாயிறு அன்று தூய்மை படுத்தும் பணியினை செய்து வழிபாடு செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.





 அது சமயம் கோயிலுக்கு நமது முக நூல் நண்பர். திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தமது துணைவியாரோடு கோயில் தரிசனம் செய்ய வந்திருந்தமை கண்டு மிக்க மகிழ்வுற்றேன்.





 அறுபது வயதிலும் கோபுரத்தின் மீதேறி சிவதொண்டு புரியும் இவ்வடியார்க்கும் அடியேன் நான்



 பணிமுடித்து சிறு கலந்துரையாடல் , அதன் பின் சிவபுராண முழக்கத்துடன் வழிபாடு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget