Friday, December 18, 2009
picasaweb.google.com/kadamburtempleஇதுதான் கடம்பூர் கரக்கோயில் கி.பி 1113ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் தேர்வடிவ கோயிலாக கட்டப்பட்டது.இம் மன்னனின் நாற்பத்து மூன்றாம் ஆட்சி ஆண்டில் கட்டப்பெற்றது.
கரக்கோயில் என்றால் தேர் வடிவ கோயில் என்ற பெயர் , கடம்பர் ராஜ்யத்தை ஆண்ட கடம்பர்களின் "முண்டா" மொழியில் கரம் என்றால் கடம்பு என்று பெயர் ,எனில் கர கோயில் என்றால் கடம்ப மர கோயில் என பொருள் தருகிறது.
மிகவும் நுண்ணிய சிற்ப வேலை பாடுகளுடன் சைவ வைணவ புராண கதைகளை சிற்பமாக வடித்துள்ளனர் .900 ஆண்டுகள் வயதுடைய இக்கோயில் கடலூர் மாவட்டம் -காட்டுமன்னார்குடி அருகே ஆறு கி.மீ.தொலைவில் உள்ளது