Saturday, August 31, 2013
Wednesday, August 21, 2013
ஆவணி முதல் நாள் பூசைகள்
தமிழ் மாத பிறப்பு தோறும் கடம்பூர் கோயிலில் அனைத்து இறை படிமங்களுக்கும் நல்லெண்ணெய் சார்த்தி நீராட்டல் செய்து சிறப்பு பூசைகள் நடைபெறும் ,அவ்வாறே ஆவணி பிறப்பினை முன்னிட்டு பூசைகள் நடைபெற்றன.
மாதப்பிறப்பன்று மட்டும் ஆயிரத்து எட்டு ருத்திராக்ஷம் கொண்ட மாலை அணிவிக்கப்படும் , மேலே ஏழாயிரம் கொண்ட ருத்ராக்ஷ பந்தல் உள்ளது
எம்பெருமானை முக்கோடி தேவர்களும், ஆயிரம் தலை நாகமும் சூழ நிற்கும் காட்சி
Wednesday, August 14, 2013
சுந்தரர் முக்தி நாள் பூசை

பன்னிரு திருமுறைகளில் 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும்.
63 நாயன்மார்களில் முதல் மூவரில் ஒருவர் சுந்தரர். இவரது அழகில் மயங்கிய சிவபெருமான் இவரை சுந்தரா என்று அழைத்ததுடன், இவருக்காக தூது சென்ற பெருமைக்குரியவர். திருநாவலூர் (தற்போது விழுப்புரம் மாவட்டம்)என்னும் திருத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் சுந்தரர் 8ம் நூற்றாண்டில் தோன்றினார். இவரது இயற்பெயர் நம்பியாரூரார்.
கடம்பூர் திருக்கோயிலில் ஆடி சுவாதி அன்று சுந்தர பெருமான் முக்தி நாளினை முன்னிட்டு நாயனாருக்கு சிறப்பு திரு நீராட்டல் நடைபெற்றது. இதனை கடம்பூர் பாலாஜி குருக்கள் நடத்தி வைத்தார்.
காட்டுமன்னார்கோயில் SKஎலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் திரு. சண்முகம் அவர்கள் இந்த விழாவின் உபயத்தினை ஏற்றுக்கொண்டார். அவரது தந்தைக்கு கோயில் மரியாதை செய்யப்படுகிறது.
Friday, August 9, 2013
கடம்பூரில் திரு ஆடி பூர திருநீராட்டல்
பெருமைமிகு கடம்பூர் திருத்தலத்தில் அம்பிகை முப்பெரும்தேவியாக காலையில்கலைமகள், மாலையில் மலைமகள், இரவில் சக்தியாகவும் ஒரே அம்பிகை வெவ்வேறு வடிவம் கொள்கிறாள்
இவளுக்கு நாலா வித வாசனாதி திரவியங்களாலும்,பால், தயிர் கொண்டும் நீராடல் செய்து பூசனை நடைபெற்றதன் காட்சி தொகுப்பினை கண்டுகளியுங்கள்.
இச்சமயம் கண்டாச்சிபுரம்-தமிழ் வேத வார வழிபாட்டுமன்றத்தினர் மெய்சிலிர்க்கும் வாத்திய இசையுடன் இறைவன் இறைவியை வழிபட்டனர்.
Subscribe to:
Posts (Atom)