
பன்னிரு திருமுறைகளில் 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும்.
63 நாயன்மார்களில் முதல் மூவரில் ஒருவர் சுந்தரர். இவரது அழகில் மயங்கிய சிவபெருமான் இவரை சுந்தரா என்று அழைத்ததுடன், இவருக்காக தூது சென்ற பெருமைக்குரியவர். திருநாவலூர் (தற்போது விழுப்புரம் மாவட்டம்)என்னும் திருத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் சுந்தரர் 8ம் நூற்றாண்டில் தோன்றினார். இவரது இயற்பெயர் நம்பியாரூரார்.
கடம்பூர் திருக்கோயிலில் ஆடி சுவாதி அன்று சுந்தர பெருமான் முக்தி நாளினை முன்னிட்டு நாயனாருக்கு சிறப்பு திரு நீராட்டல் நடைபெற்றது. இதனை கடம்பூர் பாலாஜி குருக்கள் நடத்தி வைத்தார்.
காட்டுமன்னார்கோயில் SKஎலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் திரு. சண்முகம் அவர்கள் இந்த விழாவின் உபயத்தினை ஏற்றுக்கொண்டார். அவரது தந்தைக்கு கோயில் மரியாதை செய்யப்படுகிறது.