******************** கடம்பூர் கோயில்: மேலகடம்பூர் கோயிலில் திருஒடேந்து செல்வர் திருநாள்

Saturday, January 3, 2015

மேலகடம்பூர் கோயிலில் திருஒடேந்து செல்வர் திருநாள்


 கடம்பூர் கோயிலில் திருவெம்பாவை திருநாளின் எட்டாம் நாள் பிச்சாடனர் என அழைக்கப்படும் திருஒடேந்து செல்வருக்கு திருநீராட்டல் செய்து எழுந்தருளிவிக்கும் நாள்


பிச்சாடனர் கோலம் தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவனார் எடுத்த கோலமாகும். இக் கோலத்தில் இறைவன் 'பிச்சை உவக்கும் பெருமான்' என்றும் அழைக்கப் படுவார்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் பிட்சாடனர் வசீகர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
மாணிக்கவாசகர் தம் பாடல்களில், "ஆரூர் எம் பிச்சைத் தேவா என் நான் செய்கேன் பேசாயே.." என்கின்றமை குறிப்பிடத்தக்கது.









 இதனை மேலகடம்பூர் திரு கோவிந்த பிள்ளை குடும்பத்தினர் வழமையாக செய்து வருகின்றனர். 3.1.2015அன்று அவரது மகன் திரு மாசிலாமணி அவர்கள் செய்து சிறப்புற்றார்.


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget