துர்க்கை என்றால் தீய எண்ணத்தினை அழிப்பவள் என்று பொருளாகும். எருமை வடிவம் கொண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்தமையால், ’மகிஷாசுரமர்த்தினி’ என்றும் துர்க்கைக்குப் பெயருண்டு
ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விசேட பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால்தான் அவற்றின் ஆற்றல்கள் கூடுதலாகும்.
ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்லமுடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை.
ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை.
அதனால் இன்றைய ஞாயிறு அன்று ராகு கால நேரத்தில் கடம்பூர் கோயிலில் துர்க்கை எனப்படும்கொற்றவைக்கு சிறப்பு திருநீராட்டல் நடைபெற்றது.