கடம்பூர் கோயிலில் 5.7.2015 அன்று வியாழன் நகர்வு- முன்னிட்டு
தென்முகநாதருக்கு சிறப்பு பூசனைகள் காலை முதல் நடந்தேறின.காலை சிறப்பு
திருநீராட்டலும் , இரவு 8.00 மணி தொடங்கி யாக வேள்வியும், அதனை தொடர்ந்து
திரவியங்களால் திருநீராட்டலும் , அலங்காரமும் செய்யப்பட்டு இரவு
11.02மணிக்கு தீப ஆராதனைகளும் நடைபெற்றன. இரவு நேரமான போதிலும் அதிக அளவில்
பக்தர்கள் குழுமி இருந்தனர். அனைவருக்கும் சுவாமிக்கு நிவேதித்த
நிவேதனங்கள் வழங்கப்பட்டன. இந்த யாக வேள்வி, மற்றும் சிறப்பு திருநீராட்டல்
பணிகளை திரு.பாலகணேசகுருக்கள் செய்வித்தார்.