மார்கழி மாணிக்கவாசகர் திருவிழாவின் ஒன்பதாம் நாள் ஐந்திருமூர்த்திகளும் திருநீராட்டல் பெற்று காட்சி தருவதை பாருங்கள்
Monday, January 9, 2012
Thursday, January 5, 2012
மாணிக்கவாசகர் விழா
30.12.2011முதல் 08.01.2012வரை மார்கழியில் மாணிக்கவாசகர் விழா நடைபெறும், கடைசிநாளில் ஆடல் வல்லான் திருவீதி உலா காண்பார், கடம்பூர் திருக்கோயிலில் பத்து நாட்களும் மூலவர் ஆடல்வல்லானுக்கு சிறப்பு நீராட்டும் நடைபெறும்
பின்னர் மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் நீராட்டல் நடைபெற்று திருவெம்பாவை பாடல்கள் 23 ம் பாடப்பெறும் , அச்சமயம் ஒரு அன்பருக்கு மாணிக்கவாசகராக முடி சூட்ட பெற்று பாடல்கள் பாடுவார்
இதோ திரு.செல்வமணி எனும் அன்பர் முடி சூடி பாடும் காட்சி, உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் இணைந்து பாடுகிறார்.
பின்னர் தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கி மகிழ்வார்கள், பத்து நாட்களும் பத்து மண்டகப்படி தாரர்கள் இதனை ஏற்று மகிழ்வார்கள்
Thursday, December 22, 2011
கடம்பூரில் சனிபெயர்ச்சி
கடம்பூர் தலம் மிக தொன்மை வாய்ந்த தலம் , இங்கே அருள்மிகு. சனி பகவான் காக்கைக்கு பதில் கழுகு வாகனத்தின் மீதமர்ந்து அருள் பாலிக்கிறார்.ஏனெனில் ராமாவதார காலத்தின் பின்னரே இவருக்கு கழுகு வாகனமாயிற்று
21.12.2011 அன்று காலை 9.30மணிக்கு யாக பூஜை தொடங்கியது , அனைத்து அன்பர்களிடமும் வேண்டுதல் பெற்று யாகம் நடைபெற்றுபின்னர் சகல வாசனை திரவியங்களை கொண்டு நீராட்டல் நடைபெற்றது
வெள்ளி அங்கி பூண்டு சிறப்பு அலங்காரத்தில்காட்சி தரும் சனிபகவானை கண்டு அருள் பெறுவீர்
கூடுதல் சனி பெயர்ச்சி படங்கள்
21.12.2011 அன்று காலை 9.30மணிக்கு யாக பூஜை தொடங்கியது , அனைத்து அன்பர்களிடமும் வேண்டுதல் பெற்று யாகம் நடைபெற்றுபின்னர் சகல வாசனை திரவியங்களை கொண்டு நீராட்டல் நடைபெற்றது
வெள்ளி அங்கி பூண்டு சிறப்பு அலங்காரத்தில்காட்சி தரும் சனிபகவானை கண்டு அருள் பெறுவீர்
கூடுதல் சனி பெயர்ச்சி படங்கள்
Friday, December 16, 2011
புதிய தலவரலாறு வெளியீடு
நான்காம் பதிப்பாக திருக்கோயில் தலவரலாறு வெளியிடப்பட்டது. சிதம்பரம் சைவத்திரு.ரத்தினசபாபதிஅவர்கள் இந்த வரலாறு புத்தகத்தினை அழகிய முறையில் ,சபாநாயகம் அச்சகத்தில் அச்சிட்டுக் கொடுத்தார்கள்.
அதனை 10.12.2011 அன்று மொரிஷியஸ் அன்பர்கள் இத் திருக்கோவில் வந்திருந்த போது சிதம்பரம் சைவத்திரு. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை திரு சொக்கலிங்கம் பிள்ளை , மற்றும் அறங்காவலர் திரு.செல்வமணி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
இதனை அன்பர்கள் இலவசமாக தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் பெறலாம். kadamburvijay@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வேண்டுகோள் அனுப்பவும்.
Friday, December 9, 2011
கார்த்திகை சொக்கட்பனை
Subscribe to:
Posts (Atom)