Friday, May 3, 2013
Friday, April 26, 2013
கடம்பூரில் ஓவியவழியோனுக்கு சிறப்பு பூசனைகள்
காலன் தனது பணியினை இடைவிடாது செய்துவருபவன்,அதனால் சோர்ந்து பொய் சிவனிடத்தில் ஒரு கோரிக்கை வைக்கிறான், தன்னுடன் இணைந்து பணியாற்ற ஒரு நம்பிக்கையான ஒருவன் தேவை என, சிவனும் தனது சித்திரத்தில் இருந்து சித்திர குப்தனை வர செய்கிறார். குப்தன் என்றால் வழி வந்தவன் என பொருள். தமிழில் ஓவியவழியோன் என்றழைப்போம்.
சித்திரை முழுநிலவு நாளில் வந்தவர் என்பதால் இவருக்கு அன்று சிறப்பு பூசனைகள் நடைபெறும், கடம்பூர் கோயிலில் அன்று மாலை சிறப்பு திருநீராட்டல் , பூசனை என வழிபாடு நடைபெற்றது.
கரக்கோயிலின் வடதிசையில் நான்முகன் வீற்றிருக்க அவன் பணியாட்களாக காலனும் , ஓவியவழியோனும் உள்ளனர்.
காலன் கையில் பாசத்துடன்
சித்திரை முழுநிலவு நாளில் வந்தவர் என்பதால் இவருக்கு அன்று சிறப்பு பூசனைகள் நடைபெறும், கடம்பூர் கோயிலில் அன்று மாலை சிறப்பு திருநீராட்டல் , பூசனை என வழிபாடு நடைபெற்றது.
கரக்கோயிலின் வடதிசையில் நான்முகன் வீற்றிருக்க அவன் பணியாட்களாக காலனும் , ஓவியவழியோனும் உள்ளனர்.
காலன் கையில் பாசத்துடன்
Monday, April 15, 2013
கடம்பூர் கோயிலில் ஐந்தொகுதி நூல் வாசித்தல்
கடம்பூர் கோயிலில்சித்திரை முதல் நாள் முன்னிட்டு காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது , மாலை பஞ்சாங்கம் எனப்படும் ஐந்தொகுதி நூல் வாசிக்கப்பட்டது.
இன்றைய ஐந்தொகுதி நூல் வசிக்கும் நிகழ்வினை மேலணிக்குழி திரு.சம்பந்தம் அவர்கள் ஏற்று போற்றினார்கள்.
இன்று துவங்கும் வருடம் "விஜய" எனும் வருடமாகும் இது தமிழ் வருடமா? அல்லது சம்ஸ்கிருத வருடமா? என்பதனை வாசிக்கும் உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுவோம்
வருடத்தி முதல் நாள் இது போன்று புதிய மனோன்மணி நிறுவன "பாம்பு" ஐந்தொகுதி நூலினை வாசித்தல் இக்கோயில் மரபு, இவ்வருடமும் வழமை போல் நூலுக்கு பூசை செய்யப்பட்டு வாசிக்கப்பட்டு, வந்திருந்த அன்பர்களுக்கு நீர்மோர் , பானகமும் இதர நிவேதனங்களும் வழங்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)































































