Tuesday, May 21, 2013
திருநாவுக்கரசரின் முக்தி நாள் பூசை
சித்திரை சதய நட்சத்திரத்தில் பிறந்த அப்பர் -திருநாவுக்கரசராக மாறி சைவத்தொண்டு புரிந்து முக்தி அடைந்த நாள் இன்று, இதனை சிவாலயம் தோறும் இதனை போற்றி கொண்டாடுவர்.
கடம்பூர் சிவாலயத்தில் இரண்டு நாவுக்கரசர் உலோக திருமேனிகள் உள்ளன,என் கடன் பணி செய்து கிடப்பதே என தமிழ் கூறும் நல்லுலகிற்கு இரத்தின வரிகளை கொடுத்த தலம் கடம்பூர்.அமிர்தகடேசுவரரை போற்றி பணிந்த அவர்தம் திருமேனிகளுக்கு பலவகை வாசனாதி திரவியங்களால் திருநீராட்டல் நடைபெற்று போற்றப்பெற்றனர்
அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் சிறப்பிடம் பெற்ற இவர் இத்தல இறைவனை போற்றிஅருளிய திருப்பதிகம் இரண்டும் ஐந்தாம் திருமுறையில் திருக்குறுந்தொகை பகுதியில் இடம் பெற்றுள்ளன.

Friday, May 3, 2013
Friday, April 26, 2013
கடம்பூரில் ஓவியவழியோனுக்கு சிறப்பு பூசனைகள்
காலன் தனது பணியினை இடைவிடாது செய்துவருபவன்,அதனால் சோர்ந்து பொய் சிவனிடத்தில் ஒரு கோரிக்கை வைக்கிறான், தன்னுடன் இணைந்து பணியாற்ற ஒரு நம்பிக்கையான ஒருவன் தேவை என, சிவனும் தனது சித்திரத்தில் இருந்து சித்திர குப்தனை வர செய்கிறார். குப்தன் என்றால் வழி வந்தவன் என பொருள். தமிழில் ஓவியவழியோன் என்றழைப்போம்.
சித்திரை முழுநிலவு நாளில் வந்தவர் என்பதால் இவருக்கு அன்று சிறப்பு பூசனைகள் நடைபெறும், கடம்பூர் கோயிலில் அன்று மாலை சிறப்பு திருநீராட்டல் , பூசனை என வழிபாடு நடைபெற்றது.
கரக்கோயிலின் வடதிசையில் நான்முகன் வீற்றிருக்க அவன் பணியாட்களாக காலனும் , ஓவியவழியோனும் உள்ளனர்.
காலன் கையில் பாசத்துடன்

Subscribe to:
Posts (Atom)