கடம்பூர் திருக்கோயிலில் இரு வைரவர்கள் அருள் தந்து சிறப்பிக்கின்றனர்.
15.11.2014 சனி தினத்தன்று, கடம்பூர் கோயிலில் காலவைரவருக்கும், வைரவருக்கும் காலவைரவ எண் திதி பூசைகள் நடைபெற்றன.
சிறப்பு அம்சம்:
1. இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும்.
2. இவரின் தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிகப்பு வர்ணம் கொண்ட மேனி கொண்டவர்.
3. நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகயிறு, உடுக்கை ஆகியவை கைகளில் இருக்கும்.
4. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் செய்யலாம் . ஏனென்றால் கால நேரமே இவர்தான்.
5. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே.
6. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர்.
7. பாம்பினை முப்புரி நூலாகவும்,அரைஞான் கொடியாகவும் அணிந்துள்ளார்.
8. இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்)
9. நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம்.
10. வியாதிகளை குணப்படுத்துபவர்.
11.எதிரிகளை சித்து வேலைகளை தடுத்து தொழிலில் முன்னேற உதவுவார்.
தேங்காயில் விளக்கிடுவதும், சாம்பல் பூசணியில் விளக்கிடுவதும் செய்யலாம்
காலவைரவ எண் திதி பூசையினை அன்று திருநீற்று காப்பிட்டு , சிறப்புற நடத்தியவர் எனது நண்பர், காட்டுமன்னார்கோயில்-பிராயடி திரு.கௌசிகன் அவர்கள்