ஐப்பசி முழுநிலவு நாளில் எம்பெருமானுக்கு
வடித்தெடுத்த அன்னத்தினை எம்பெருமான் திருமேனியில் சார்த்தி முக லிங்கம்
போல் வடிவமைத்து பின் உண்ணத்தகுந்த காய்கறி வகைகள், பழங்கள் கொண்டு
அழகூட்டி பூசனை செய்வது வழமை.பின்னர் இந்த அன்னம் சிவபுராண முழக்கத்துடன்
திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டு, கோயிலின் வடபால் உள்ள சிவன்
குளத்திலும் , சக்தி குளத்திலும் கரைக்கப்பட்டன.நீர், நிலம் காற்று மண், என
அனைத்திலும் வாழும் உயிர்களுக்கெல்லாம் இறைவன் உண்டி கொடுத்து காத்தமையை
நினைவுறும் விதமாய் இப்பூசை நடைபெறுகிறது.இதனை ஏற்று நடத்துவோர் ஒவ்வோர்
அன்ன பருக்கைக்கும் ஒரு கல்ப காலம் சிவனடி கீழ் இன்புற்று வாழ்வர்.சிவாய நம