கடம்பூர் கல்வட்டுக்கள்
சிதம்பரம் அருகில் 30 கி. மி தொலைவில் உள்ளது மேலக்கடம்பூர் எனும் பாடல் பெற்ற தலம். இது குலோத்துங்கனால் கட்டபெற்ற கோயில். முதலாம் குலோத்துங்கன் கட்டிய கோயில் என்பதற்க்கான ஆதாரமாக கர கோயில் தெற்கு சுவற்றில் கல்வெட்டு உள்ளது. குலோத்துங்கனின் அடை மொழியான "புகழ் மாது விளங்க " என்றும் அவரது 43 ம் ஆட்சி ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாக பொறிக்கப்பட்டுள்ளது.