தமிழ் புத்தாண்டு கரவருடம் துவக்கம்
தமிழ் புத்தாண்டின் முதல் நாள் என்பதால் கரவருடத்தின் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.இவ்வருட பலன்கள் வாசிக்கப்பட்டன.குருக்கள் முதலில் புது வருட பஞ்சாங்கத்திற்கு பூஜை செய்து பின் அவற்றில் உள்ள பலன்கள், மழை அளவு, நட்சத்திர பலன்கள், ராசி பலன்கள் ஆகியவற்றை வாசிக்க, குருக்களின் மகன் பாலாஜி குருக்கள் ஒலி பெருக்கியில் படித்தார், பின் அனைவருக்கும் நீர் மோர் , பானகம் ,பிரசாதமாக வழங்கப்பட்டது .