******************** கடம்பூர் கோயில்: July 2015

Friday, July 10, 2015

குருபெயர்ச்சி முன்னிட்டு கடம்பூர் கோயிலில் தென்முக நாதருக்கு சிறப்பு பூசைகள்

கடம்பூர் கோயிலில் 5.7.2015 அன்று வியாழன் நகர்வு- முன்னிட்டு தென்முகநாதருக்கு சிறப்பு பூசனைகள் காலை முதல் நடந்தேறின.காலை சிறப்பு திருநீராட்டலும் , இரவு 8.00 மணி தொடங்கி யாக வேள்வியும், அதனை தொடர்ந்து திரவியங்களால் திருநீராட்டலும் , அலங்காரமும் செய்யப்பட்டு இரவு 11.02மணிக்கு தீப ஆராதனைகளும் நடைபெற்றன. இரவு நேரமான போதிலும் அதிக அளவில் பக்தர்கள் குழுமி இருந்தனர். அனைவருக்கும் சுவாமிக்கு நிவேதித்த நிவேதனங்கள் வழங்கப்பட்டன. இந்த யாக வேள்வி, மற்றும் சிறப்பு திருநீராட்டல் பணிகளை திரு.பாலகணேசகுருக்கள் செய்வித்தார்.Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget