******************** கடம்பூர் கோயில்: April 2012

Sunday, April 22, 2012

அருகாமை திருத்தலங்கள்-பாபநாசம்

 பாபநாசம் 108 சிவாலயம் இத்தலம் ராமபிரான் கரன், தூஷன் என்ற இரு அரக்கர்களை அழித்த பாபம் தீர லிங்கம் அமைத்து வழிபட்ட தலம்

ராமலிகேசுவரர் என்ற பெயரில் அருள்கிறார். இதன் அருகில் கோயில் வளாகத்தில் நீளமான மண்டபத்தில் ஒன்று போல் அமைந்த நூற்றெட்டு லிங்கங்கள் மூன்று வரிகளில் காட்சி தருகின்றன.



இரவின் விளக்கொளியில் 108 விளக்குகளும் எரிய லிங்கங்களை காண கண்கோடி வேண்டும் 

Wednesday, April 18, 2012

திருநாவுக்கரசர் முக்தி நாள்



 திருநாவுக்கரசர் என அழைக்கப்படும் அப்பர் சுவாமிகளின் குருபூசை இன்று(17.04.2012) கடம்பூர் கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது,

அடியார்கள் முக்தி பெற்று இறைவனடி சேர்ந்திட்ட நாளினை முக்தி நாள்  என கொண்டாடப்படுகிறது
 இத்தலம் நாவுக்கரசரால் பாடப்பெற்று ,ஐந்தாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

 அப்பர் அடிகள் கோயில்கள் தோறும் உழவாரபணிகள் செய்து பின் வழி படு செய்வதை தன் வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தார், கடம்பூர் தலத்தில் பா இசைக்கும் போது  
"என் கடன் பணி செய்து கிடப்பதே"  என பணி செய்து வழிபடுவதை முதன்மையாக்குமாறு நம் அனைவரையும் அறிவுறுத்துகிறார்

 ஆண்டு தோறும் நாவுக்கரசர் முக்தி நாள்  நிகழ்வினை காட்டுமன்னார்கோயில் குருகுலம் ஆசிரியர் திரு.SM அவர்கள் ஏற்று போற்றுகின்றார்கள்

திருநாவுக்கரசர் அடிக்கமலம் போற்றி!போற்றி!!

Sunday, April 15, 2012

நந்தன ஆண்டு துவக்கம்


 13.04.2012 தேதி அன்று நந்தன ஆண்டு துவக்கம் , இது தமிழாண்டா? அல்லது சம்ஸ்கிருத பெயர்  பூசிய ஆரிய ஆண்டா? அதனை புறம் தள்ளுவோம்,

புது ஆண்டின் துவக்கம் இது !!
 கடம்பூர் கோயிலில் ஆண்டு தோறும் புதிய ஐந்தொகுதிநூல்  (பஞ்சாங்கம்) வாசிக்கப்படும்.

 திரு.சம்பந்தம்தம்பதியினர்  இந்நிகழ்வினை ஏற்று போற்றுகின்றனர்.


கோயில் பெரிய  பிள்ளையாரினை  வணங்கி ஐந்தொகுதி நூல் வாசிக்கப்பட்டது, சிலநிமிட மின்தடைக்கு பிறகு மின்சாரம் வந்தது,







 ராசிபலன், நட்சத்திர பலன், வருட பலன்கள் வாசித்து  பின் அன்பர்களுக்கு நீர்மோர், வெல்ல பானகமும் வழங்கி சிறப்பிக்க பட்டது.
அன்றுஎண் திதி (அஷ்டமி திதி) என்பதால் கால வைரவருக்கும் சிறப்பு பூசை நடை பெற்றது நந்தன ஆண்டு நிகழ்வுகள்

Sunday, April 8, 2012

அ.ப இசைகல்லுரி பேராசிரியர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி

 6.4.2012  முழு நிலவு நாள் அன்று மாலை கடம்பூர் கோயிலில் சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழக இசைகல்லூரியின் பேராசிரியர்கள், சைவ சமய குரவர்கள் பாடியருளிய தேவாரங்களை இசையுடன் பாடி இறைவனையும் மக்களையும் மகிழ்வித்தனர்.

 ஒவ்வொரு முழுநிலவு நாளன்றும்  இவர்கள் குழுவாக சென்று தலங்கள் தோறும் தேவார பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்விக்கின்றனர்.
திரு.விஜயேந்தர்-  மிருதங்கம்

 திரு.சுந்தர்- வயலின்
சீர்காழி 
திரு.சட்டநாதர்-வாய்பாட்டு



 ஒலி பெருக்கி,ஒலி வாங்கி,அனைத்தையும் உடன் எடுத்து வந்து சிறப்பாக நடத்துகின்றனர்,


 எம்பெருமான் இசை கேட்டால் புவியே அசைந்தாடும்,
ஓர் பக்தையின்  கைகள் தாளமிடுவதை பாருங்கள்
இந்நிகழ்ச்சி இவரது பதினெட்டாவது நிகழ்ச்சி ஆகும் , முதல் நிகழ்ச்சி திருக்கோலக்காவில் ஆரம்பம் ஆனது.
இவர் பணி தொடர நம் மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்வோம்.

பங்குனி உத்திர பூசை

 கடம்பூர் கோயிலில் 5.4.2012  வியாழன் அன்று பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு வில்லேந்திய முருகனுக்கு சிறப்பு நீராட்டலும் , ஆராதனைகளும் நடைபெற்றது.






 இத்தலத்தில் முருகப்பெருமான் சிவனிடம் வில் பெற்றதால் இங்கே முருகன் வில்லேந்திய வேலவனாக , வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி  தருகிறார்.

 இப் பெருவிழாவை கடம்பூரை அடுத்த தொரப்பு கிராமத்தினர் வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்








மூலவராக உள்ள ஆறுமுகன் அருணகிரிநாதரின் திருப்புகழால்  பாடப்பெற்றவர், அவருக்கும் அன்றையதினம் நீராட்டல், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

வில்லேந்திய வேலவனுக்கு அரோகரா!
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget