******************** கடம்பூர் கோயில்: June 2012

Tuesday, June 26, 2012

ஆனி உத்திர திருநீராட்டல்

 ஆடல்வல்லானுக்கு வருடத்தில் ஆறு முறை திருநீராட்டு விழா நடைபெறும்.சிவாலயங்களில் நடராசருக்கு நடத்தப்பெறும் நீராட்டு விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் திருநீராட்டல்  நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில்  திருநீராட்டல் நடத்தப்படும்

 இன்றையதினம் கடம்பூரில் யாகபூசையுடன் துவங்கிய திருமஞ்சன நிகழ்ச்சி கல்லுக்கும் கலவைக்கும் நீராட்டலும் மலர் ஒப்பனையும் நடைபெற்றது.

நால்வருடன் நடராசன் -சிவகாமி

கற்சிலையாய் கடம்பூரில்

 இன்றைய ஆனி திருமஞ்சன விழா இரண்டாவது அறங்காவலர் திரு.செல்வமணி குடும்பத்தினர் உபயமாக நடைபெற்றது.

  இன்றைய தினத்தில் தான் உலகெங்கும் உள்ள  நடராசர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராசரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் தரிசனம் செய்து நற்பலன் பெறுவீர்.

Sunday, June 24, 2012

கடம்பூரில் மாணிக்கவாசகர் குருபூசைமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.
இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார்.

தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று . அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.

ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.

அதனை முன்னிட்டு கடம்பூர் திருக்கோயிலில் சிறப்பு திருநீராட்டலும்  ஆராதனையும் நடத்தபெற்றது.

Sunday, June 10, 2012

கடம்பூரில் உழவாரப்பணி
  மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவாவரும்

எனும் வள்ளுவர் வாக்கு சொல்வது மனம் ,செயல் இவைதூய்மை பெற தூய்மை பெற்ற நல்லோரோடு சேருங்கள் என்பதாகும். இவர்கள் தான் என்ற அகந்தையை, மன அழுக்கை, மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி கூடி இறைபணி செய்து தூய்மை பெறுகின்றனர்

 இன்று கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

 என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற பொருள் பொதிந்த  வாக்கு அப்பர் பெருமானால் இத்தலத்தில் பாடபெற்றது.

தொண்டு செய்தே வழிபாடு செய்யவேண்டும் என்ற அவரது எண்ணத்தினை சிரமேற்க்கொண்டு பணி செய்யும் இவர்கள் காட்டுமன்னார்குடி சிவனருள் உழவார திருக்கூட்ட அன்பர்கள்பக்தியில் சிறந்தது தொண்டாற்றி வழிபடுதலே ஆகும், சீக்கியர்கள் இதற்க்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றனர். காலணி துடைத்தல், பாத்திரம் கழுவுதல், வழிபாட்டிடம் தூய்மைபடுத்துதல் போன்ற பல பணிகளை செய்த பின்னரே வழிபாட்டிடம் செல்கின்றனர்.
அப்பருக்கு மாசிலா பொன் கொடுத்து இறைவனே இதனை உறுதிபடுத்தி உள்ளான்.....
தொண்டு செய்வோம் குறைவிலா வாழ்வு பெறுவோம்
நாவுக்கரசர் திருவடி போற்றி போற்றி
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget