******************** கடம்பூர் கோயில்: February 2013

Sunday, February 24, 2013

கடம்பூர் கற்சபையில்ஆடல்வல்லான் திருநீராட்டல்

 கோயில் என்றாலே சிதம்பரம் ,அந்த தில்லையின் தென் மேற்கில் கொள்ளிட வடகரையில் காட்டுமன்னர்கோயில் அருகில் ஆறு கி.மி தூரத்தில் உள்ளது மேலக்கடம்பூர் எனும் தேவார பாடல் பெற்ற தலம். பிரதோஷ சிறப்பு தலம் , கரக்கோயில் பெயர்கொண்ட தலம்,சதய நட்சத்திர தலம் என பல சிறப்புடைய ஊர்

இங்கே ஆடல்வல்லான் கற்சபை  உள்ளது, எம்பெருமான் கற்படிமமாக உள்ளான்
 கடம்பூர் திருக்கோயிலில் ஆடல்வல்லானின் ஆறு திருநீராட்டல்களில் இவ் வருட நிறைவு மாசி  திருநீராட்டல் தினம் வெகு சிறப்பாக 24.02.2013  ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது.


கல்லுக்கும் கட்டிக்கும் திருநீராட்டல் நிறைவு பெற்று,மலர் ஒப்பனை செய்யப்பெற்று  பதிகம், வேதம் பாடப்பெற்று ஒளிவழிபாடு நடத்த பெற்றது.

எம்பெருமான் திருவடி போற்றி


Tuesday, February 19, 2013

வாழை மரத்துக்கும் வாழைமரத்துக்கும் கல்யாணம்
மாங்கல்ய குறைபாடு , நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை ஏற்படுகிறது 
அதனை நீக்க இரண்டு வாழை மரங்களை மணமகன் மணமகளாக உருவகப்படுத்தி அதற்கு திருமணம் செய்வித்தல் மூலம் மணமகன் அல்லது மணமகளின் தோஷங்கள் அந்த மரங்களுக்கு மாறிவிடுகிறது 
இவர்கள் குறையில்லாத நிலைக்கு வருகின்றனர். இதனால் விரைவில் திருமணம் நடைபெறுகிறது.இன்றைய தினம் கடம்பூர் கோயிலில் ஒரு பெண்ணுக்கும் , அடுத்ததாக ஒரு இளைஞருக்கும் நடைபெற்றது.
 இவ்வாறு செய்வது பல கோயில்களில் வழக்கமில்லை கடம்பூர் கோயிலில் குருக்கள் ஒரு தொண்டு மனப்பாங்குடன் குறைந்த செலவில் இது போன்ற 

குறைநீக்கபூசைகள் செய்து தருகிறார்

 உங்களுக்கு வேண்டியவர்கள் திருமணம் இது போன்ற குறைகளால் தடை ஆகிறதா?

விளக்கம் பெற அழையுங்கள்
வே.செல்வகணேசகுருக்கள் -மேலக்கடம்பூர் 
04144-264638
Friday, February 15, 2013

கடம்பூர் கோயிலில் மாசி மாத பிறப்பு எண்ணை சாத்துபடி உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : திரு நீராட்டல் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல் (2) உபாங்கம் : தூப-தீபம், பூசை யின் போது காட்டுதல் விபூதி சாத்துவது, குடை, சாமரம், கண்ணாடி,  ஆகியவற்றை காண்பித்தல்   (3) ப்ரத்யங்கம் : நிவேதனம்செய்தல், ஸ்ரீபலி, ஹோமம் செய்தல், நித்யோத்ஸவம், சுருகோதகம், ஸ்வஸ்திவாசனம்.

 இவற்றில் திருநீராட்டலின் முன் கற்படிமங்களுக்கு நல்லெண்ணெய் கொண்டு மெழுகுதல் சிறப்பு, இதனால் கற்படிமங்களின் சக்திநிலை குறையாமலிருக்கும். கல்லின் ஆயுளும் நீடிக்கும்

 ஆகவே ஒவ்வொரு தமிழ் மாதபிறப்பன்றும் கடம்பூர் கோயிலின் அனைத்து கற்படிமங்களுக்கும் நல்லெண்ணெய் சாத்துபடி செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவரின் உதவியினால் நடத்தபெறுகின்றது.

 எண்ணை சார்த்தப்பட்டு திருநீராட்டல் முடிந்து  சிறப்பு பூசனைகளும் நடைபெறும்

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget