******************** கடம்பூர் கோயில்: 2011

Thursday, December 22, 2011

கடம்பூரில் சனிபெயர்ச்சி

  கடம்பூர் தலம் மிக தொன்மை வாய்ந்த தலம் , இங்கே  அருள்மிகு. சனி பகவான் காக்கைக்கு பதில் கழுகு வாகனத்தின் மீதமர்ந்து அருள் பாலிக்கிறார்.ஏனெனில் ராமாவதார காலத்தின் பின்னரே இவருக்கு கழுகு வாகனமாயிற்று 21.12.2011 அன்று காலை 9.30மணிக்கு யாக பூஜை தொடங்கியது , அனைத்து அன்பர்களிடமும் வேண்டுதல்  பெற்று யாகம் நடைபெற்றுபின்னர் சகல வாசனை திரவியங்களை கொண்டு நீராட்டல் நடைபெற்றதுவெள்ளி அங்கி  பூண்டு சிறப்பு அலங்காரத்தில்காட்சி தரும்  சனிபகவானை கண்டு அருள் பெறுவீர்
கூடுதல் சனி பெயர்ச்சி படங்கள்


Friday, December 16, 2011

புதிய தலவரலாறு வெளியீடு


நான்காம் பதிப்பாக திருக்கோயில் தலவரலாறு வெளியிடப்பட்டது. சிதம்பரம் சைவத்திரு.ரத்தினசபாபதிஅவர்கள் இந்த வரலாறு புத்தகத்தினை அழகிய முறையில் ,சபாநாயகம் அச்சகத்தில் அச்சிட்டுக் கொடுத்தார்கள்.

அதனை 10.12.2011 அன்று மொரிஷியஸ் அன்பர்கள் இத் திருக்கோவில் வந்திருந்த போது சிதம்பரம் சைவத்திரு. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை திரு சொக்கலிங்கம் பிள்ளை , மற்றும் அறங்காவலர் திரு.செல்வமணி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

இதனை அன்பர்கள் இலவசமாக தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் பெறலாம். kadamburvijay@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வேண்டுகோள் அனுப்பவும்.

Friday, December 9, 2011

கார்த்திகை சொக்கட்பனை


 கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் சொக்கட்பனை ஏற்றப்படுவது வழக்கம்
 எம்பெருமான் சந்திரசேகரருக்கும் அம்பாளுக்கும் நீராட்டல், ஆராதனைகள் நிறைவுற்று அகல் விளக்கில் தீபம் ஏற்றி ஒவ்வொரு சன்னதிகளிளும் வைக்கப்பட்டு,

Tuesday, November 29, 2011

108சங்கு நீராட்டல் 2-ம்வாரம்

 கடம்பூர் கோயிலில்கார்த்திகை இரண்டாவது திங்கள்கிழமை (சோமவாரம்) யாகபூசையுடன் நடத்தப்பட்டது.

 சங்குகள் தீபராதனை செய்யப்பட்டு, எம்பெருமானுக்கு நீராட்டல் நடத்தபெற்றது.


Monday, November 21, 2011

108 சங்கு நீராட்டல் முதல் வாரம்

 கார்த்திகை திங்கட்கிழமை (சோமவாரம்) சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.கார்த்திகை திங்கள் விரதமிருப்பவர்களுக்கு மிகுந்த நற்பலன்களை அள்ளித்தருவார்,

அதுபோல் நீராட்டு  பிரியனான எம்பெருமானை 108சங்குகளால்  நீராட்டுதல் மிகுந்த நற்பலன்களை தரும்.

 வலம்புரி சங்கு கரக்கோயிலானை நீராட்ட காத்திருக்கிறது.

 நீர் என்பது உலக உயிர்களுக்கு அமுதத்துக்கு ஒப்பானது, ஆதலால் 108 சங்கினால் நீராட்டல் என்பது உயர்வான பொருளை கொண்டு உயர்வானவரை கொண்டாடுதல் ஆகும்.
 கடம்பூர் அமிர்தகடேசுவரர் அமுததால் ஆனவர், அவரை கார்த்திகை திங்கள்கிழமையன்று நூற்றெட்டு சங்குகளை வைத்து  யாக பூசை  செய்து அதனை கொண்டு நீராட்டப்பெற்றால் எல்லா நலன்களும் பெறுவர்.தொடர்ந்து அனைத்து திங்கள்களிலும்  108 சங்கு நீராட்டல்  நடைபெறும். மேலும் படங்களுக்கு செல்லவும் 108 சங்கு அபிஷேகம்

Saturday, November 19, 2011

நந்திஎம்பெருமானுக்கு வெள்ளி அங்கி

 சிவகணங்களுள் முதன்மையானவர் நந்தியெம்பெருமான், அமிர்தகடேசுவரர் திருமேனிக்கு வெள்ளிஅங்கி  பூட்டிய பின்னர் நந்திஎம்பெருமானுக்கும் வெள்ளி சார்த்தி பார்க்க ஆவல் எழுந்தது. அதனை ஒருபக்தர் நனவாக்குகிறார்.
நந்திக்கும் அங்கி தயாராகுகிறது.

அமிர்தகடேசுவரர் திருஅங்கி  பணியினை செய்த பெருமைக்குரிய ,தாராசுரம் திரு.மகாலிங்க பத்தர் அவர்களே இப்பணியையும் மேற்கொள்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget