******************** கடம்பூர் கோயில்: November 2013

Wednesday, November 27, 2013

கடம்பூரில் கார்த்திகை இரண்டாம் திங்கள் சங்கு திருநீராட்டல்






















கடம்பூரில் கால வைரவர் எண் திதி பூசை



பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.


 பலசிறப்புடைய 64 வைரவர்களில் கடம்பூரில் காளவைரவராக அருள் புரிகிறார் , இவருக்கு கார்த்திகை எண்திதி யில் சிறப்பு பூசனை செய்வது வழக்கம் அதன் காட்சிகள் இதோ,







கடம்பூரில் கனடா அன்பர்கள் திருமுறை முற்றோதல்

 கனடா  வாழ் தமிழர்கள் வருடம்தோறும் திருமுறை பாடல் பெற்ற தலம் தோறும் சென்று திருமுறை முற்றோதல் செய்வது வழக்கம், சென்ற வருடம் போல் இம்முறையும் வந்திருந்து ஐந்தாம், ஆறாம் திருமுறையினை கடம்பூர் கோயிலில் பாராயணம் செய்தனர்.











இதற்கான பயண ஏற்பாடுகளை சிதம்பரம் சந்திரசேகர்  குழுவினர் செய்தனர்.




Wednesday, November 20, 2013

கார்த்திகை திங்கள் சங்குதிருநீராட்டல்

 கார்த்திகை திருநாளில் திங்கட்கிழமை தோறும் அணித்து கோயில்களிலும் சிறப்பு பூசனைகள் நடைபெறும், சில கோயில்களில் 108, 1008 சங்குகளைகொண்டு பூசித்து திருநீராட்டல் நடைபெறும் ,கடம்பூர்கோயிலில்  நூற்றெட்டு சங்குகளுக்கு பூசை நடைபெற்று திருநீராட்டல் பெற்றார் எம்பெருமான்.


 ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.




 ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். (கோ - பசு, மடி - பால் சுரக்குமிடம்).



Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget