******************** கடம்பூர் கோயில்: January 2014

Thursday, January 23, 2014

கடம்பூர் கோயிலில் சிவபதசேகரனுக்கு முக்தி நாள் பூசை

 திருக்கடம்பூர் எனும் திருத்தலத்தில் 21.1.2014 அன்று சண்டேசர் எனும் சிவபதசேகரனுக்கு முக்தி நாள் பூசை.




 வேதியர் வம்சத்தில் எச்சதத்தன் என்பவருக்கு உலகம் உய்யும் பொருட்டு விசாரசர்மன் என்ற குழந்தை பிறந்தது. ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன் வேதம் முறையாகப் பயின்று வரும் நாளில் ஊரிலுள்ள பசு மாடுகளை மண்ணி ஆற்றங்கரை அருகில் மேய்த்து ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து அதை பசும் பாலால் அபிஷேகம் செய்து வந்தான் அச்சிறுவன் .ஊரார் புகார் செய்ததால் தந்தை எச்சதத்தன் மரத்தின் பின் நின்று இதைப் பார்த்துக் கோபம் கொண்டு சிவபூஜைக்காக அங்கு வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தான். சிவத்தியானம் நீங்கிக் கண் விழித்த பாலகன், சிவஅபராதம் செய்தது தந்தை என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர் என்று தீர்மானித்து அருகில் இருந்த மாடு மேய்க்கும் கோலை கையில் எடுத்துவீச அது மழுவாக மாறி ,  தகப்பனாரின் உதைத்த காலை வெட்டி வீழ்த்தியது. அடுத்த கணமே சிவபூஜையைத் தொடர ஆரம்பித்தார்.
பால் உகந்த நாதனாகிய இறைவன் உமா தேவியோடு விடை வாகனத்தில் அக்குழந்தைக்குமுன் காட்சிஅளித்தார். முனிகள் வேதமோத,பூத கணங்கள் அருகில் நிற்கவும்  கருணையுடன் வெளிப் பட்ட புண்ணிய மூர்த்தியைக் கண்டு ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற அப்பாலகன் சுவாமியின் பாத மலர்களைவீழ்ந்து வணங்கினான்.
,"என்னிடம் வைத்த பக்தியால் தகப்பனாரின் காலை வெட்டின உனக்கு அடுத்த தந்தை இனி நானே " என்று சொல்லி அப்பாலனைத் தழுவி கருணையோடு தடவி உச்சி மோந்து ,
"உனக்கு சண்டேச பதம் தந்தோம். இனி நாம் உண்பதும் உடுப்பதும் சூடுவதும் உன்னிடமே வந்து சேரும் " என்று சொல்லித் தனது சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக்குழந்தைக்குச் சூட்டினார்.

எனவேதான் கோயில்களில் இறைவன்  நீராடிய நீர்  வரும் கோமுகத்தின் அருகில் (வடக்குப் பிராகாரத்தில்) தெற்கு நோக்கியவாறு சண்டிகேஸ்வரர் எனும் சிவபத சேகரனின்  சன்னதி இருக்கிறது. இவரை தரிசித்தால்தான் சிவ தரிசனம் செய்த பலன் கிடைக்கும். சதா சிவசிந்தனையில்  இருக்கும் இவரின்குறுக்கில்செல்லகூடாது.

















Friday, January 17, 2014

கடம்பூர் திருக்கோயிலில் கதிரவனுக்கு சிறப்பு திருநீராட்டல்


 பொங்கல் அன்று கதிரவனின் சுற்று தென் திசை நோக்கி பயனப்பட ஆரம்பமாகும் இந்நாளை முன்னிட்டு கதிரவனுக்கு சிறப்பு திருநீராட்டலும் பூசையும் நடைபெற்றது. கோட்டகம் திரு,குமார் பிள்ளை இந்நிகழ்வினை நடத்தினார்.







Wednesday, January 1, 2014

கடம்பூர் கோயிலில் அனுமன் பிறந்தநாள்







 வாயு பகவானுக்கும் அஞ்சனைக்கும் மகனாக அனுமன் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.


 கடம்பூர் கோயிலில் இன்று அனுமனுக்கு சிறப்பு திருநீராட்டல் நடை பெற்றது.




















Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget