******************** கடம்பூர் கோயில்: November 2012

Wednesday, November 21, 2012

கடம்பூரில் வள்ளி திருமணம்


வழமையாக பல சிவ தலங்களில் சூரன் வதம் முடிந்த பின்னர் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சியளித்து அருள் புரிவார் ,இத்தலத்திலும்அவ்வாறே முருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது,


வள்ளியை எதிர்கொண்டழைத்து மாலை மாற்றும் நிகழ்ச்சி






தம்பதிகளுக்கு திருஷ்டி சுற்றுதல்


 இதன் உபயதாரர் திரு.சொக்கலிங்கம் பிள்ளை புது ஆடைகளை சுவாமியிடம் வைத்து ஆசி பெறுகிறார்.

வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கபடுகிறது.,பின் பக்தர்கள் அனைவரும் சுவாமியின் திருபாதங்களை போற்றி வணங்கி மகிழ்ந்தனர்.

108 சங்கு நீராட்டல்

 கார்த்திகைமாதத்தில்  எம்பெருமானுக்கு சோமவார் அபிஷேகம்  என்று திங்கள்கிழமை தோறும் திருநீராட்டல் நடைபெறும் , குறிப்பிட்ட சில  தலங்களில் 1008 சங்கினாலும்  108 சங்கினாலும் நீராட்டுவர்.




 கடம்பூர் இறைவனுக்கு முதல் திங்கள் கிழமையில் நூற்றெட்டு சங்கினால் நீராட்டல் நடைபெற்றது.அதற்கென உள்ள தட்டுக்களில் அடுக்கப்பட்டு யாக வேள்வி  செய்து நீராட்டல் நடைபெற்றது.








இதன் மண்டகப்படிதாரர்கள் திரு.நாகரத்தினம்,மற்றும் அவரது சிறிய தந்தை இதனை ஏற்று போற்றினர்.
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி, அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி.

ஆறுமுகனுக்கு ஆறு நாள் பெருவிழா

 ஆறுமுகன் கடம்ப மாலையினை விரும்பி அணிபவன் அவன் இத்தலத்தில் ஆறுமுகனாதராக அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்று விளங்குவதால் இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டினை சேர்ந்த காலத்திலேயே முருகன் சன்னதி பெற்று விளங்கியது புலனாகும்



 ஐப்பசி பிரதமை தொடங்கி  சஷ்டி வரை ஆறுநாட்களும் பெருவிழாவாக அனைத்து தலங்களிலும் கொண்டாடப்படும் , இத்தலத்தில்  ஆறு நாட்களிலும் சிறப்பு திருநீராட்டலும்  மலர் சூட்டி பாமாலை கொண்டு அர்ச்சனை செய்யப்படும்

















 இந்த மண்டகப்படிஆராதனைகளை தலைமை குருக்கள் திரு.செல்வகணேச குருக்களும், அவர் மகன் திரு பாலாஜி குருக்களும் செய்து வருவதை படத்தில் காணலாம் .
முருகனுக்கு முருகனே ஆரதிப்பதை போல் நான் உணர்கிறேன் பாலாஜி என்றால் முருகன் என்றபொருள் பலருக்கு தெரியாதென்பதால் அது பற்றிய சிறு குறிப்பு -
                                                                                     
  பாலாஜி-   இச்சொல் தமிழ் சொல் அல்ல, வாடா நாட்டினர் பயம்படுத்தும் "ஜி" என்னும் ஈறு ,சிவ ஜி (சிவன்) விஷ்ணு ஜி என கடவுளரையும் காந்தி ஜி நேதாஜி மனிதர்களையும் விளிப்பதால் இது ஓர் விளிப்பெயர் என்பது நன்கு விளங்கும் பாலாவில் உள்ள பா  வாடா மொழி நிரலான நான்காவது /ப்பா / ஆகும் .
1.ப 2.ப்ப 3.ba 4.ibaa பாலா என்றால் வட மொழியில் ஈட்டி அல்லது வேல் ஆகும். பயன் படுத்தியபின் மீட்க முடியாத அம்பு அல்லது வேல் போன்ற ஏறி ஆயுதமே பாலா ஆகும் , பாலாஜி என்றால் வேல் கொண்டகடவுளவர் என்று பொருள் . வேல் ஏந்தியவர் முருகனை தவிர வேறொருவர் இல்லை. எனில் பாலாஜி என்பது முருக கடவுளே ஆகும். 

முன்னொரு காலத்தில் திருப்பதியில் முருகனுக்கே வழிபாடு நடந்து வந்தது விஜயநகர சாம்ராஜ்ய வழி வந்தோர்  தாக்கத்தில் திருப்பதி சுவாமி  வைணவ கடவுளானார். பல ஆயிரம் மக்கள் தங்கள் முன்னோர் பயன் படுத்திய அதே பெயரை மட்டும் மாற்றாமல் அவரை இன்றும் பாலாஜியாகவே பாவிக்கின்றனர்.

 







 நாயிற் கடையாய் கிடந்த அடியேனு க்கு என தேவார மூவர் தங்களை தாழ்த்தி கொண்டு பாடியதை நினைவு கூர்வோம் ...........பொன்னும் பொருளும் பதவியும் எல்லாம் சிவனடிக்கீழ் 

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget