******************** கடம்பூர் கோயில்: October 2013

Sunday, October 20, 2013

கடம்பூர் திருக்கோயிலில் அன்னவார்ப்பு திருநாள்


 ஐப்பசி முழுநிலவு நாளில் எம்பெருமானுக்கு அன்னவார்ப்பு செய்தல் சிறப்பு,  வடித்தெடுத்த அரிசி சாதத்தினை எம்பெருமான் திருமேனி மீது சார்த்தி காய்கறிகளால் , மலர்களால் அழகு செய்து தீப வழிபாடு செய்தல் வழமை

 கடம்பூர் ஈசன் அன்னவார்ப்பில் உள்ளதை காண்கிறீர்கள், இந்திரனின் பாபத்தினை போக்கிய பாபஹரேஸ்வரர் மீதும் அன்ன உருண்டை வைத்து வழிபாடு நடைபெற்றது.


 கோயிலில் இருந்து முழுநிலவு காட்சி


சார்த்தப்பட்ட அன்னம் உலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் சென்று சேரவேண்டி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம் , அவ்வாறே திருக்கோயில் சிவாலய குளத்தில்கரைக்கப்பட்டது.

Wednesday, October 16, 2013

கடம்பூர் திருக்கோயில் கலைமகளுக்கு சிறப்பு பூசைகள்

 கடம்பூர் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள் புரியும் அருள்மிகு.கலைமகளுக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றன.
















Thursday, October 10, 2013

கடம்பூர் கோயிலில் ஒன்பதிரவு பூசனைகள்- மூன்று, நான்கு, ஐந்தாம் நாள் காட்சிகள்


 கடம்பூர் கோயிலில் ஒன்பதிரவு பூசனைகளின் மூன்றாம் நாள் திரு.மாணிக்கம் -திருப்பூர் அவர்கள் உபயமாக நடைபெறுகிறது.



 நான்காம்நாள் திரு.கணேசன் பிள்ளை குடும்பத்தினரின் உபயமாக நடைபெற்றது.







 ஐந்தாம் நாள் திரு.ராமலிங்கம் அவர்களின் உபயமாக நடைபெற்றது.



Sunday, October 6, 2013

கடம்பூர் திருக்கோயிலில் ஒன்பதிரவு பூசைகள் -முதல் &இரண்டாம் நாள்


 நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.


















 இரண்டாம் நாள்  பூசைகள்








முதல் நாள் பூசையை திரு.வீரராகவன் அவர்களும், இரண்டாம் நாள் பூசைகளை திரு.பொன்னம்பலம் அவர்களும் ஏற்று சிறப்பித்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget