******************** கடம்பூர் கோயில்: February 2012

Sunday, February 26, 2012

கொற்றவைக்கு மாசி திருநீராட்டல்

கடம்பூர் சிவாலயத்தில்  வருடம்தோறும் துர்க்கை எனப்படும் கொற்றவை க்கு மாசி மாதத்தில் சிறப்பு திருநீராட்டல் நடை பெறுவது வழக்கம் ,


  அது போல் 26.02.2012  ஞாயிற்றுக்கிழமை ஆதலால் ராகு கால நேரத்தில் திரு நீராட்டல் நடைபெற்றதன் தொகுப்பினை காணுங்கள்






 கருவரையின் வெளி சுற்றில் வடக்கு மாடத்தில் எருமை வாகனத்துடனும் சிம்ம வாகனத்துடனும் சங்கு சக்கரத்துடன் புன்னகையுடன் காட்சி தரும் கொற்றவை


 மேற்கு திருமாளபற்று மண்டபத்தில் வீற்றிருக்கும் வனதுர்க்கைஎனப்படும் காட்டுகொற்றி,





Monday, February 20, 2012

பெரும் சிவனிரவு பூசைகள்


மஹா சிவராத்திரி எனப்படும் பெரும் சிவனிரவு பூசனைகள் நேற்று சிறப்பாக நடந்தேறின, இதன் தொகுப்பு  ..
முதல் கால பூசை அலங்காரம்


 இரண்டாம் கால பூசை அலங்காரம்






 மூன்றாம் கால பூசையின் போது சந்திரசேகர்-அம்பாளுக்கும் திருநீராட்டல் நடைபெற்று இடப் வாகனத்தில் காட்சி அளித்தார்



மூன்றாம் காலத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும்  அலங்காரம்

இங்கே நான்காம் கால பூசனையின் போது செய்யப்பட அலங்காரம். நான்காம்  கால பூசையுடன் சிவனிரவு பூசை நிறைவு பெற்றது
அனைத்து படங்களை பார்க்க

Sunday, February 19, 2012

நந்திக்கு வெள்ளி அங்கி அணிவித்தல்


 பிரதோஷம் எனப்படும் சந்தியா கால பூசையின் போது புதியதாக செய்யப்பட்ட  வெள்ளி அங்கி சார்த்தப்பட்டது, முன்னதாக புண்ணியாசனம் எனப்படும் தூய்மைப்படுத்தல் பூசை  நடைபெற்றது
 இப்பூசையினை தல சிவாச்சாரியார் செல்வகணேசகுருக்கள் மற்றும் அவரது மகன் பாலகணேச குருக்கள் நடத்தி வைத்தனர்

 பெயர் சொல்லிக்கொள்ள விரும்பாத மலேசிய வாழ் பக்தர் செய்தளித்த அங்கி தாராசுரத்தில் செய்யப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் பிரதோஷம் என்றால் நினைவுக்கு வருவது திருக்கடம்பூர் என தேவாரத்தில் அழைக்கப்படும்  மேலக்கடம்பூர் தல பிரதோஷம் மட்டுமே !


 "விடைநவிலும் கொடியானை வெண்கொடி சேர் நெடு மாடம்" என ரிஷப கொடி பறக்கும் மாட வீதிகளை கொண்ட தலமாக விளங்கிய இவ்வூரை ஞானசம்பந்தர் பாடி பரவியதே இதற்க்கு சான்றாகும்
மீண்டும் ஓவ்வொரு  - பிரதோஷம் எனப்படும் சந்தியா கால பூசையின் போது புதியதாக செய்யப்பட்ட  வெள்ளி அங்கி  அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
                                                     அனைவரும் வாரீர்

Saturday, February 11, 2012

சிவபதசேகரன் குருபூசை


 தை 27 அன்று சிவபதசேகரன் எனும் சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற நாள் , அந்தணர் வீட்டில் பிறந்து மாடு மேய்ப்பராகி , பால் குடத்தை இடறிய தந்தையின் காலையே  வெட்டியெறிந்த விசாரசருமர் என்ற சிறுவனுக்கு சண்டேசர் என்ற சிவபதம் கிடைத்த நாள்.






தை 27 அன்று சிவபதசேகரன் எனும் சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற நாளை முன்னிட்டு கடம்பூர் கோயிலில் உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்புதிருநீராட்டல் நடைபெற்று சண்டேசுவரர் போற்றப்பட்ட பாடல்களை பாடி அகமகிழ்ந்தனர்

சிவபத சேகரா போற்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget