******************** கடம்பூர் கோயில்: November 2014

Tuesday, November 25, 2014

கடம்பூர் இறைவருக்கு 108 சங்கு நீராட்டல் 108சங்கு திருநீராட்டல் கடம்பூரில் வெகு சிறப்புடன் கார்த்திகை முதல் மற்றும் இரண்டாம் வாரம் சிறப்புடன் நடைபெற்றது
முதல்திங்கள் திரு.நாகரத்தினம் அவர்களும், இரண்டாம் திங்கள் திரு.தர்மலிங்கம் அவர்களும் இப்பூசையினை செய்து மகிழ்ந்தனர்.

Saturday, November 15, 2014

கடம்பூர் கோயிலில் காலவைரவருக்கு எண் திதி பூசைகள்


 கடம்பூர் திருக்கோயிலில் இரு வைரவர்கள் அருள் தந்து சிறப்பிக்கின்றனர்.
15.11.2014 சனி தினத்தன்று, கடம்பூர் கோயிலில் காலவைரவருக்கும், வைரவருக்கும் காலவைரவ எண் திதி பூசைகள் நடைபெற்றன.


 சிறப்பு அம்சம்:
1. இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும்.
2. இவரின் தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிகப்பு வர்ணம் கொண்ட மேனி கொண்டவர்.
3. நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகயிறு, உடுக்கை ஆகியவை கைகளில் இருக்கும்.
4. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் செய்யலாம் . ஏனென்றால் கால நேரமே இவர்தான்.
5. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே.
6. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர்.
7. பாம்பினை முப்புரி நூலாகவும்,அரைஞான் கொடியாகவும் அணிந்துள்ளார்.
8. இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்)
9. நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம்.
10. வியாதிகளை குணப்படுத்துபவர்.
11.எதிரிகளை சித்து வேலைகளை தடுத்து தொழிலில் முன்னேற உதவுவார். தேங்காயில் விளக்கிடுவதும், சாம்பல் பூசணியில் விளக்கிடுவதும் செய்யலாம்
காலவைரவ எண் திதி பூசையினை அன்று  திருநீற்று காப்பிட்டு , சிறப்புற நடத்தியவர் எனது நண்பர், காட்டுமன்னார்கோயில்-பிராயடி திரு.கௌசிகன் அவர்கள்

Friday, November 7, 2014

அன்னம் சார்த்தும் திருநாள்

 ஐப்பசி முழுநிலவு நாளில் எம்பெருமானுக்கு வடித்தெடுத்த அன்னத்தினை எம்பெருமான் திருமேனியில் சார்த்தி முக லிங்கம் போல் வடிவமைத்து பின் உண்ணத்தகுந்த காய்கறி வகைகள், பழங்கள் கொண்டு அழகூட்டி பூசனை செய்வது வழமை.பின்னர் இந்த அன்னம் சிவபுராண முழக்கத்துடன் திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டு, கோயிலின் வடபால் உள்ள சிவன் குளத்திலும் , சக்தி குளத்திலும் கரைக்கப்பட்டன.நீர், நிலம் காற்று மண், என அனைத்திலும் வாழும் உயிர்களுக்கெல்லாம் இறைவன் உண்டி கொடுத்து காத்தமையை நினைவுறும் விதமாய் இப்பூசை நடைபெறுகிறது.இதனை ஏற்று நடத்துவோர் ஒவ்வோர் அன்ன பருக்கைக்கும் ஒரு கல்ப காலம் சிவனடி கீழ் இன்புற்று வாழ்வர்.சிவாய நமRelated Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget