குரு பெயர்ச்சி என்பது ஜுபிடர் என்ற குரு கோள் சூரியனை சுற்றிவரும் தன் பாதையில் ஒரு சுழற்சியை முடிக்கும்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதாக ஐந்தொகுதி (பஞ்சாங்கம்) கூறுகிறது, இதன் படி குருகோள் ஆடு ராசியில் (மேஷ)இருந்து காளைராசிக்கு (ரிஷப) மாறுகிறது.அதனால் இந்த ராசி அன்பர்கள் ஓராண்டுக்கு குருதரும் நன்மைதீமைகளை அனுபவிப்பார்கள் .
இந்த நன் நாளினை முன்னிட்டு கடம்பூர் கரக்கோயிலின் தென் பால் உள்ள(தக்ஷணமூர்த்தி) தென்முக கடவுளுக்கு சிறப்பு பூசனைகளும் வாசனா திரவியங்களை கொண்டு நீராட்டலும் நடைபெற்று வண்ண மலர் ஒப்பனை செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
ஐந்து முக தீப ஒளியிலே மனம் துய்ப்போம்
மேலும் ஒன்பான் கோள்களில் ஒன்றான குருவிற்கும் சிறப்பு பூசனை நடைபெற்றது