அமையாது ஒழுக்கு
எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க
நன் நிலம் செழித்து மா நிலம் செழிக்க, கழனி, குளம், ஏரிகளில் நீர் நிரம்பி
மண்ணும் ,மரமும், மாக்களும், மனிதர்களும், மற்றுமெல்லா உயிர்களும்
இன்புற்றிட ,தமிழ்நாடெங்கும் வான் மழை பெய்ய வேண்டி கடம்பூர்
அமிர்தகடேசுவரர் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள் பாலிக்கும்
அருள் மிகு ஆரவாரவிநாயகர் சுவாமிக்கு
12.08.2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு மகா வேள்வியும்,
108 கலச நன் நீராட்டுவிழாவும் நடைபெறும்.
தொடர்ந்து
மழை பெய்விக்க வல்ல அமிர்தவர்ஷினி ராக நாதஸ்வர ஆலாபனை
ரெட்டியூர் திரு.முருகானந்தம் குழுவினரால் நிகழ்த்தப்படும் .
அன்புடையோர் எல்லாம் பிரார்த்தனை செய்ய வாரீர்.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் திரு.க.விஜயன்,திரு.சு.செல்வமணி அவர்களும், திருக்கோயில் முதன்மை குருக்கள் திரு.செல்வகணேசன் குருக்களும் ,திரு.பாலாஜி குருக்களும் செய்துவருகின்றனர். ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர்
திரு. சிவசுப்ரமணியன் அவர்களும் பணி செய்து வருகின்றனர்.