30.12.2011முதல் 08.01.2012வரை மார்கழியில் மாணிக்கவாசகர் விழா நடைபெறும், கடைசிநாளில் ஆடல் வல்லான் திருவீதி உலா காண்பார், கடம்பூர் திருக்கோயிலில் பத்து நாட்களும் மூலவர் ஆடல்வல்லானுக்கு சிறப்பு நீராட்டும் நடைபெறும்
பின்னர் மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் நீராட்டல் நடைபெற்று திருவெம்பாவை பாடல்கள் 23 ம் பாடப்பெறும் , அச்சமயம் ஒரு அன்பருக்கு மாணிக்கவாசகராக முடி சூட்ட பெற்று பாடல்கள் பாடுவார்
இதோ திரு.செல்வமணி எனும் அன்பர் முடி சூடி பாடும் காட்சி, உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் இணைந்து பாடுகிறார்.
பின்னர் தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கி மகிழ்வார்கள், பத்து நாட்களும் பத்து மண்டகப்படி தாரர்கள் இதனை ஏற்று மகிழ்வார்கள்