மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவாவரும்
எனும் வள்ளுவர் வாக்கு சொல்வது மனம் ,செயல் இவைதூய்மை பெற தூய்மை பெற்ற நல்லோரோடு சேருங்கள் என்பதாகும். இவர்கள் தான் என்ற அகந்தையை, மன அழுக்கை, மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி கூடி இறைபணி செய்து தூய்மை பெறுகின்றனர்
இன்று கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற பொருள் பொதிந்த வாக்கு அப்பர் பெருமானால் இத்தலத்தில் பாடபெற்றது.
தொண்டு செய்தே வழிபாடு செய்யவேண்டும் என்ற அவரது எண்ணத்தினை சிரமேற்க்கொண்டு பணி செய்யும் இவர்கள் காட்டுமன்னார்குடி சிவனருள் உழவார திருக்கூட்ட அன்பர்கள்
பக்தியில் சிறந்தது தொண்டாற்றி வழிபடுதலே ஆகும், சீக்கியர்கள் இதற்க்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றனர். காலணி துடைத்தல், பாத்திரம் கழுவுதல், வழிபாட்டிடம் தூய்மைபடுத்துதல் போன்ற பல பணிகளை செய்த பின்னரே வழிபாட்டிடம் செல்கின்றனர்.
அப்பருக்கு மாசிலா பொன் கொடுத்து இறைவனே இதனை உறுதிபடுத்தி உள்ளான்.....
தொண்டு செய்வோம் குறைவிலா வாழ்வு பெறுவோம்
நாவுக்கரசர் திருவடி போற்றி போற்றி