******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

Wednesday, September 19, 2012

கடம்பூர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி


 19.09.2012 புதன் அன்று             விநாயகர் சதூர்த்தி ,
இதனை முன்னிட்டு கடம்பூர் ஆரவார விநாயகருக்கு சிறப்பு திருநீராட்டல் நடைபெற்றது.



 இன்றைய தினத்தில் ஓர் சிறப்பம்சமாக 2004 ஆண்டில் நடப்பெற்ற இந்த நாகலிங்க மரம் மூன்று பூக்களை ஈன்றது.

குரூபிட்டா என தாவரவியல் பெயர் கொண்ட இம்மரம் Cannonball Tree என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது , சொறி,படை போன்றநோய்களுக்கு இதன் இலை மருந்தாக உதவுகிறது, இதன் காய்கள் காய்ந்து கீழே விழும் போது ஒரு பெரிய வெடி சத்தம் ஏற்ப்படும், அதனால் இது திருடர்களை பயமுறுத்தும் என இம்மரங்கள் கோயிலில் வளர்க்கப்படுகிறது. எனினும், இப் பூவினை ஓர் அதிசய பூவாக ஆன்மிக உலகம் கருதுகிறது. ஆறு இதழ் தாமரையில் முக்கோடி தேவர்கள் புடைசூழ ஓர் லிங்கம் நடுவில் உள்ளது, அந்த லிங்கத்திற்கு  ஓர் ஆயிரம் தலை கொண்ட நாகம் குடை பிடிப்பது போன்ற தோற்றம் வேறு பூக்களில் காணமுடியாதது.

 மஞ்சளில் பிடித்து வைத்த பிள்ளையார்







 தேர் வடிவ கரக்கோயில் இந்திரனுடையது, இத்தேரில் ஆயுள் பலம் தரும் அமிர்தகடேஸ்வரரை இருத்தி கொண்டு செல்ல இந்திரன் முயல , தன்னை மதியாமல் காரியம் செய்ய முற்ப்பட்ட தேவர்கோனின் தேரினை காலால் அழுத்தி கல்லாக்கிய அந்த ஆரவார விநாயகர் கன்னி மூலையில் அமர்ந்திருக்கின்றார் இவருக்கு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.






Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget