******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் பெரும் சிவனிரவு பூசைகள்

Tuesday, March 12, 2013

கடம்பூர் கோயிலில் பெரும் சிவனிரவு பூசைகள்
 கடம்பூர் யுகம் கடந்து நிற்கும் எம்பெருமான் அருள்மிகு அமிர்தகடேசுவரர் எழுந்தருளியுள்ள தலம் , 1300 ஆண்டுகட்கு முன் நாயன்மார் நால்வராலும் பாடல் பெற்றது.தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் உள்ள ஊர்.

 இங்கு லிங்கம் அமிர்ததுளியால் ஆன தான்தோன்றி (சுயம்பு)

 10.03.2013 ஞாயிறு அன்று பெரும் சிவனிரவு பூசைகள் நான்கு கால பூசையாக நடைபெற்றது. ஒவ்வொரு காலமும் நாலாவித வாசனை திரவியங்களால் திருநீராட்டபெற்று மலர் ஒப்பனை செய்யப்பட்டு , தல பதிகம் பாடப்பெற்று ஐங்கிளை ஒளி காட்டபெற்று  வழிபாடு நடத்த பெற்றது முதல் காலம்- திரு பாலகிருஷ்ணன் அவர்களும்,

இரண்டாம் காலம்-திரு சண்முக முதலியார் அவர்களும்,  

மூன்றாம் காலம்-கூடத்து பிள்ளைமார் வகையறாக்களும் உடன் திருமதி.உஷாமணிரத்தினம் அவர்களும்,

 நான்காம் காலம்-கொல்லாபுரம் திரு. சொக்கலிங்கம் அவர்களும் ஏற்று நடத்தினார்கள்.

 நல்லெண்ணெய், திரவியம், மஞ்சள்,
அரிசிமாவு,வெல்ல தூள், தேன், பசும்பால், தயிர், நெய், இளநீர்,எலுமிச்சை பழங்கள்,ஐந்சுவை கூழ், ஆனைந்து (பஞ்சகவ்யம்) சந்தனப் பொடி ஆகிய வாசனை திரவியங்கள் நீராட்ட படுவதை காணலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget