******************** கடம்பூர் கோயில்: திருநாவுக்கரசரின் முக்தி நாள் பூசை

Tuesday, May 21, 2013

திருநாவுக்கரசரின் முக்தி நாள் பூசை

 சித்திரை சதய நட்சத்திரத்தில் பிறந்த அப்பர் -திருநாவுக்கரசராக மாறி சைவத்தொண்டு புரிந்து முக்தி அடைந்த நாள் இன்று, இதனை சிவாலயம் தோறும் இதனை போற்றி கொண்டாடுவர்.

 கடம்பூர் சிவாலயத்தில் இரண்டு நாவுக்கரசர் உலோக திருமேனிகள் உள்ளன,என் கடன் பணி செய்து கிடப்பதே என தமிழ் கூறும் நல்லுலகிற்கு இரத்தின வரிகளை கொடுத்த தலம் கடம்பூர்.அமிர்தகடேசுவரரை  போற்றி பணிந்த  அவர்தம் திருமேனிகளுக்கு பலவகை வாசனாதி திரவியங்களால் திருநீராட்டல் நடைபெற்று போற்றப்பெற்றனர்
 அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் சிறப்பிடம் பெற்ற இவர் இத்தல இறைவனை போற்றிஅருளிய திருப்பதிகம் இரண்டும் ஐந்தாம் திருமுறையில் திருக்குறுந்தொகை பகுதியில் இடம் பெற்றுள்ளன.


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget