******************** கடம்பூர் கோயில்: 108 சங்கு நீராட்டல் முதல் வாரம்

Monday, November 21, 2011

108 சங்கு நீராட்டல் முதல் வாரம்

 கார்த்திகை திங்கட்கிழமை (சோமவாரம்) சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.கார்த்திகை திங்கள் விரதமிருப்பவர்களுக்கு மிகுந்த நற்பலன்களை அள்ளித்தருவார்,

அதுபோல் நீராட்டு  பிரியனான எம்பெருமானை 108சங்குகளால்  நீராட்டுதல் மிகுந்த நற்பலன்களை தரும்.

 வலம்புரி சங்கு கரக்கோயிலானை நீராட்ட காத்திருக்கிறது.

 நீர் என்பது உலக உயிர்களுக்கு அமுதத்துக்கு ஒப்பானது, ஆதலால் 108 சங்கினால் நீராட்டல் என்பது உயர்வான பொருளை கொண்டு உயர்வானவரை கொண்டாடுதல் ஆகும்.
 கடம்பூர் அமிர்தகடேசுவரர் அமுததால் ஆனவர், அவரை கார்த்திகை திங்கள்கிழமையன்று நூற்றெட்டு சங்குகளை வைத்து  யாக பூசை  செய்து அதனை கொண்டு நீராட்டப்பெற்றால் எல்லா நலன்களும் பெறுவர்.தொடர்ந்து அனைத்து திங்கள்களிலும்  108 சங்கு நீராட்டல்  நடைபெறும். மேலும் படங்களுக்கு செல்லவும் 108 சங்கு அபிஷேகம்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget