கடம்பூர் கோயிலில் 5.4.2012 வியாழன் அன்று பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு வில்லேந்திய முருகனுக்கு சிறப்பு நீராட்டலும் , ஆராதனைகளும் நடைபெற்றது.
இத்தலத்தில் முருகப்பெருமான் சிவனிடம் வில் பெற்றதால் இங்கே முருகன் வில்லேந்திய வேலவனாக , வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகிறார்.
இப் பெருவிழாவை கடம்பூரை அடுத்த தொரப்பு கிராமத்தினர் வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்
மூலவராக உள்ள ஆறுமுகன் அருணகிரிநாதரின் திருப்புகழால் பாடப்பெற்றவர், அவருக்கும் அன்றையதினம் நீராட்டல், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
வில்லேந்திய வேலவனுக்கு அரோகரா!