13.04.2012 தேதி அன்று நந்தன ஆண்டு துவக்கம் , இது தமிழாண்டா? அல்லது சம்ஸ்கிருத பெயர் பூசிய ஆரிய ஆண்டா? அதனை புறம் தள்ளுவோம்,
புது ஆண்டின் துவக்கம் இது !!
கடம்பூர் கோயிலில் ஆண்டு தோறும் புதிய ஐந்தொகுதிநூல் (பஞ்சாங்கம்) வாசிக்கப்படும்.
திரு.சம்பந்தம்தம்பதியினர் இந்நிகழ்வினை ஏற்று போற்றுகின்றனர்.
கோயில் பெரிய பிள்ளையாரினை வணங்கி ஐந்தொகுதி நூல் வாசிக்கப்பட்டது, சிலநிமிட மின்தடைக்கு பிறகு மின்சாரம் வந்தது,
ராசிபலன், நட்சத்திர பலன், வருட பலன்கள் வாசித்து பின் அன்பர்களுக்கு நீர்மோர், வெல்ல பானகமும் வழங்கி சிறப்பிக்க பட்டது.
அன்றுஎண் திதி (அஷ்டமி திதி) என்பதால் கால வைரவருக்கும் சிறப்பு பூசை நடை பெற்றது நந்தன ஆண்டு நிகழ்வுகள்