திருநாவுக்கரசர் என அழைக்கப்படும் அப்பர் சுவாமிகளின் குருபூசை இன்று(17.04.2012) கடம்பூர் கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது,
அடியார்கள் முக்தி பெற்று இறைவனடி சேர்ந்திட்ட நாளினை முக்தி நாள் என கொண்டாடப்படுகிறது
இத்தலம் நாவுக்கரசரால் பாடப்பெற்று ,ஐந்தாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.
அப்பர் அடிகள் கோயில்கள் தோறும் உழவாரபணிகள் செய்து பின் வழி படு செய்வதை தன் வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தார், கடம்பூர் தலத்தில் பா இசைக்கும் போது
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என பணி செய்து வழிபடுவதை முதன்மையாக்குமாறு நம் அனைவரையும் அறிவுறுத்துகிறார்
ஆண்டு தோறும் நாவுக்கரசர் முக்தி நாள் நிகழ்வினை காட்டுமன்னார்கோயில் குருகுலம் ஆசிரியர் திரு.SM அவர்கள் ஏற்று போற்றுகின்றார்கள்
திருநாவுக்கரசர் அடிக்கமலம் போற்றி!போற்றி!!