பிரதோஷம் எனப்படும் சந்தியா கால பூசையின் போது புதியதாக செய்யப்பட்ட வெள்ளி அங்கி சார்த்தப்பட்டது, முன்னதாக புண்ணியாசனம் எனப்படும் தூய்மைப்படுத்தல் பூசை நடைபெற்றது
இப்பூசையினை தல சிவாச்சாரியார் செல்வகணேசகுருக்கள் மற்றும் அவரது மகன் பாலகணேச குருக்கள் நடத்தி வைத்தனர்
பெயர் சொல்லிக்கொள்ள விரும்பாத மலேசிய வாழ் பக்தர் செய்தளித்த அங்கி தாராசுரத்தில் செய்யப்பட்டது
கடலூர் மாவட்டத்தில் பிரதோஷம் என்றால் நினைவுக்கு வருவது திருக்கடம்பூர் என தேவாரத்தில் அழைக்கப்படும் மேலக்கடம்பூர் தல பிரதோஷம் மட்டுமே !
"விடைநவிலும் கொடியானை வெண்கொடி சேர் நெடு மாடம்" என ரிஷப கொடி பறக்கும் மாட வீதிகளை கொண்ட தலமாக விளங்கிய இவ்வூரை ஞானசம்பந்தர் பாடி பரவியதே இதற்க்கு சான்றாகும்
மீண்டும் ஓவ்வொரு - பிரதோஷம் எனப்படும் சந்தியா கால பூசையின் போது புதியதாக செய்யப்பட்ட வெள்ளி அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அனைவரும் வாரீர்