******************** கடம்பூர் கோயில்: உடுமலை செந்தில் வழங்கிய அருளிக்காத்தல் நடனம் -எண் திக்கு நடனம்

Tuesday, March 20, 2012

உடுமலை செந்தில் வழங்கிய அருளிக்காத்தல் நடனம் -எண் திக்கு நடனம்

"பலிகெழு  செம்மலர் சார பாடலோடு ஆடல் அறாத
 கலி கெழு வீதி கலந்த கார்வயல் சூழ் கடம்பூரில்"  என ஞான சம்பந்தனால் பாடப்பெற்ற கடம்பூர் கரக்கோயிலில் 
20.3.2012 பிரதோஷதினம்   எனப்படும்  குறைவிலா தினத்தில் சென்னை- "உடுமலை செந்தில்" அவர்களின் பிரதோஷ தாண்டவம் எனும் அருளிக்காத்தல்  நடனம்
நிகழ்த்தினார்











முதலில் புஷ்பாஞ்சலி எனப்படும் பூச்சொரிதல்  நிகழ்ச்சி
பாற்கடலை கடைந்த போது உண்டான நஞ்சினை உண்ட சிவன் தன் ஆயுதங்களை வீசி ஆடிய கோலம், தசபுஜ ரிஷபதாண்டவ மூர்த்தி எனப்படும் ஏறு கொண்ட பைந்தோள் ஆடல்வல்லான் சிலா வடிவம்






அம்மையப்பர் பிரகார உலாவின்போது எட்டு திக்கிலும் ஆடப்படும் எண் திக்கு நடனம்  நிகழ்த்தினார்








பிரதோஷவேளை எனப்படும் அந்திவேளை பூசை முடிந்து தீபாராதனை நடைபெறுகிறது
இறைவன் பிரகார வலத்தின் போது எண் திக்கு நடனமும் ஆடி கடம்பூர் ஈசனையும் கடம்பூர் மக்களின் மனதையும் கொள்ளை கொண்டார்

இவர்  வி.கணபதி ஆச்சாரியாரின் மாணவரும்,



                                       
 சுவாமி   தயானந்த சரசுவதி (பூஜ்ய சுவாமிகள்) யினால் வழி நடத்தப்பட்டு, இப் பிரதோஷ தாண்டவத்தினை பல திருக்கோயிலெங்கும் நடத்திட அருளாசி வழங்கப்பட்டவர்ஆவார்..இத் திருக்கடம்பூர் (மேலக்கடம்பூர்) செந்தில் அவர்களின் 
264-வது  திருக்கோயில் நடனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஷ வித்யா குருகுலம்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget