திருவெம்பாவை திருநாளின் நிறைவு நாளான நேற்று ஆடல் வல்லானுக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் திருநீராட்டல் நடந்தேறியது.
அச்சமயம் வான்முகில் வழாது பெய்க என விவசாயிகள் வேண்டியபடி நாள் முழுதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
ஞானப்பால் கொடுத்தவனுக்கு ஆவின் பால் தருகிறோம்
அமிர்தத்திற்கு ஒப்பான மழை துளி சில மாதங்களின் பின்னர் இன்று காணபெற்றோம்
முயலகன் இங்கே ஐந்சுவைகூழிலே
இனிமையான இசை குழவியையும் உறங்கவைக்கும் போல
திருமஞ்சன நீர் பிரகார உலா வருகிறது.
அறங்காவலர்கள் திரு.விஜயன், திரு.செல்வமணி சார்பில் வானநீல பட்டு , வில்வ மாலை சார்த்தபடுகிறது.
சித்திரான்ன படையலுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இந்த ஆடல்வல்லான் திருவாதிரை திருநாள் நிகழ்வினை ஆண்டு தோறும் நடத்தும் மண்டகப்படிதாரர் திரு சிவசுப்பிரமணியன், மற்றும் குடும்பத்தினர் ஆகியோருக்கு சிறப்பு மரியாதை நடைபெறுகிறது.